Tamil News Today Live nivar cyclone : தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்புவேறு இடத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்ததால் 6 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு விடுவிப்பு.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கூட்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் இணையவழி கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 1 ந்தேதி முதல் முதற்கட்ட தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பருவநிலை மாறுபாடு குறித்து இந்தியா கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது!” ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 3ஆம் நாளில் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News Today: வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால் வரும் 26ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை.
நிவர் புயல். கடலூர் மற்றும் சிதம்பரத்தில் தயார்நிலையில் 6 பேரிடர் மீட்புக் குழுக்கள். பாம்பன், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்
கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது .கொலைக்கு துப்பாக்கி கொடுத்ததாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை கைது செய்தது போலீஸ்.
கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.
Web Title:Tamil news today live nivar cyclone medical councelling udhayanidhi stalin weather today
வரும் சட்டமன்றத் தேர்தலில் பழனி தொகுதியை கட்டாயம் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் அவர்களால் மட்டுமே நிரப்பப்பட்ட முடியும். ஏற்கனவே வாய்ப்பை நழுவவிட்ட மாணவர்கள் துணை கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்று பயன் அடையலாம் என்று டாக்டர் சி விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவு
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சை திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
லட்சத்தீவு, தென் தமிழகத்தின் கடல் பகுதிகளில் அலைகள் மூன்று மீட்டர் வரை உயரும் என்பதால் கடற்பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அசாம் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தருண் கோகோய் இயற்கை எய்தினார்.
நவம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவிட்-19 நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நிவர் புயல் காரணமாக 2 நாட்களுக்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள் என டெல்டா விவசாயிகளுக்கு வேளாண் துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
நிவர் புயல் காரணமாக 24, 25 தேதிகளில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2ஜி மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி பிரஜேஷ் சேத்தி நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
புதுச்சேரி, காரைக்காலில் 70 கி.மீ வேகத்துக்கு மேல் காற்று வீசினால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் துண்டிக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார் முதல்வர் பழனிசாமி. கொரோனா நடவடிக்கை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஏழு பேர் விடுதலை குறித்து பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கட்டண பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்வியில் சேர நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் . கட்டண பிரச்னையால் தங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை சில மாணவர்கள் ஏற்க மறுத்த நிலையில் கடிதம்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து கடந்த வாரம் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் 6 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள், இடை நின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் தொடர்பான கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 21-ல் தொடங்கிய இந்த பணி வரும் டிச.,12 வரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 1 வாரங்கள் நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரோல் கேட்டு, பேரறிவாளன் தாயார் கொடுத்த மனு மீதான் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்றது.
புயல் முன் எச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை . தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் ஆலோசனை . தலைமைச் செயலகத்தில் சற்று நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த முதல் 50 பேரில் 30 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லி பி.டி.மார்க் சாலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 8 பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு 76 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு, சூரிய மின்னாற்றலை தயாரிக்கும் கூரைகள், LED விளக்குகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 14 சதவீதம் குறைவாக கட்டுமானப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள்பற்றிய விசாரணையை தொடங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார் -. இயக்குநர் டி.ராஜேந்தர் தோல்வி
சென்னையில் இருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்பு
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தொடங்கியது; தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் முரளி, தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
பொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது; இன்று 361 பேருக்கு அழைப்பு. டிசம்பர் 4-ம் தேதி வரை மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.