Sarkar : அதிமுக-வின் கடும் எதிர்ப்புகளை அடுத்து சர்கார் படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகள் இன்று நீக்கம். இனிமேல் இந்த சீன்ஸ் எல்லாம் பார்க்க முடியாது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் சர்கார் படத்தில் மறைந்த் ஜெயலலிதா மற்றும் அரசுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகவினர் இப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அரசை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சர்கார் படத்தின் சர்ச்சை உச்சத்தை தொட, விஜய் ரசிகர்கள் பலர் மீது பேனர்கள் வைத்த காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டது. மேலும் தியேட்டர்கள் முன்பு குவிந்து போஸ்டர்கள், கட் அவுட்கள் பேனர்களை அவர்கள் கிழித்ததால் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக சர்கார் படம் நேற்று இரவு முதல் தியேட்டர்கள் திரையிடவில்லை.
Sarkar : சர்கார் படத்தில் நீக்கப்படும் காட்சிகள்
இதையடுத்து, படத்தில் வரும் சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு அதன் பணிகள் தொடங்கியது. இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் வைக்கப்படுகிறது. பின்னர் இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சிகள் நீக்கப்படுகிறது.
இது தான் தளபதியின் சர்கார்... 2 நாளில் அள்ளிக் குவித்த வசூல்... மெர்சல் சாதனையெல்லாம் ஒன்னுமே இல்லை
படத்தில் இருந்து சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர், இன்று இரவு அல்லது நாளை முதல் புதிய காப்பி தியேட்டர்களில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காட்சிகள் நீக்கப்பட்ட பிறகாவது அதிமுகவின் ஆவேசம் அடங்குமா என்பது காத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.