/tamil-ie/media/media_files/uploads/2019/09/Colors-Tamil-Thirumanam-serial.jpg)
திருமணம் சீரியல்
Thirumanam Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலை பார்க்கும் போது, தூர்தர்ஷனில் வரும் ’காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு’ நினைவுக்கு வருகிறது.
பெண்களுக்கான ஷோ மட்டுமில்ல : ’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனை
சக்தியை காதலித்த சந்தோஷ் ஜனனியை திருமணம் செய்துக் கொள்கிறான். இருப்பினும் சக்தியை அவனால் மறக்க முடியாமல், இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். இதற்கிடையே மலேசியாவிலிருந்து சக்தி வந்தாள், சந்தோஷை அடைய மாயாவுடன் இணைந்து பல திட்டங்கள் போட்டு, பின் ஜனனியிடமே அவனை விட்டுக் கொடுத்தாள். அதற்கு முன்பு சந்தோஷ் காணாமல் போக, அவனை தேடி அலைந்தால் ஜனனி.
பின்னர் அனிதா - ஆனந்த் திருமணத்தின் போது, நவீன் காணாமல் போனதால், அவனைத் தேடிச் சென்றாள் அனிதா. திருமணமும் நின்று போனது, விளைவாக நவீனுடன் சேர்ந்து அனிதாவும் காணாமல் போனாள். காணாமல் போயிருந்தார்கள் என்று சொன்னால் இந்த ஊர் உலகம் நம்பவா போகிறது. என இருவருக்கும் கோயிலில் வைத்து திருமணம் முடித்து வைத்தான் சந்தோஷ். ’நம்ம இவ்வளவு சொல்லியும் கேக்காம, இப்படி செஞ்சுட்டாரே’ என சந்தோஷ் மீது ஜனனிக்கு கோபம்.
வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்… விழாவை புறக்கணித்த ராஜ்நாத் சிங்!
திருமண பந்தலில் குடும்பத்தை தவறாக பேசியவர்கள் முன்னால், ’என் தங்கச்சி எந்த தப்பும் பண்ணல’ என அனிதாவை கொண்டுப் போய் நிறுத்த நினைத்தாள் ஜனனி. நவீனை திருமணம் செய்துக் கொண்டதால், அனிதா மீதும் ஜனனிக்கு கோபம். இந்நிலையில் தற்போது ஜனனி காணாமல் போக, அவள் எங்கே சென்றிருப்பாள் என தீவிரமாக தேடி வருகிறார்கள் திருமணம் குடும்பத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.