20 வருடங்களாக தமிழ் சினிமா துறையில் இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தில் நடித்திருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் இயக்குநரான சிம்பு, ரைட்டர்ஸ் பிளாக்கால் தவிப்பதும், அதற்கடுத்து ஜெஸ்ஸிக்கு ஃபோன் செய்து தனது ஆற்றாமையை வெளிப்படுத்துவதுமாக இருந்தது.
Ponmagal Vandhal Review Live: சமூக கருத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்
இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் ஒருவித பரபரப்பை கிளப்பியதோடு, சிம்பு, த்ரிஷாவை வைத்து, மீம்ஸ்களும் வலம் வந்தன. இந்நிலையில் த்ரிஷாவை மையமாக வைத்து மீண்டும் ஒரு பரபரப்பு நிலவியுள்ளது. த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான நடிகர் ராணா டகுபதி, சமீபத்தில் அவருடைய காதலியை அறிமுகப்படுத்தி வைத்தார். ராணாவின் காதலுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், த்ரிஷா மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
சில நாட்கள் கழித்து, சமூக வலைத்தளத்தில், “தங்களது முன்னாள் காதலியை இப்போதும் நண்பர்களாக வைத்திருப்பவர்கள் நார்சிஸ்ஸிஸ்டிக் சைக்கோபாத்ஸ்” என பதிவிட்டு ‘எனக்கு இது தெரியும்” என்றும் தலைப்பு வைத்திருந்தார் த்ரிஷா. முன்பு த்ரிஷாவும், ராணாவும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் திடீரென வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். இருப்பினும் அந்தத் திருமணம் நடைபெறவில்லை.
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: ’ஒருத்தரோட அடையாளத்த சிதைக்குறது தான் பெரிய வன்முறை’
ஆகையால், ராணா பற்றித்தான் த்ரிஷா அப்படி பதிவிட்டிருந்தார் என்ற ஒரு சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கி விட்டார் த்ரிஷா. இந்த ஊரடங்கு சமயத்தில், ராணா, அல்லு அர்ஜுன் ஆகியோருடன் வீடியோ கால் பேசிய ஃபோட்டோக்களை வெளியிட்டார் த்ரிஷா. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார் ராணா. ஆனால், ராணாவின் காதலுக்கு இதுவரையில் வெளிப்படையாக த்ரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”