செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங் வெளியிடுவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதாக பார்க் அமைப்பு அறிவித்துள்ளது.
சபாஷ் சரியான போட்டி… பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா!
சில ஆங்கில செய்தி சேனல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை மும்பை போலீஸ் உறுதிப்படுத்திய நிலையில், நாடு முழுவதும் டி ஆர் பி மோசடி விஷயம் பேசுபொருளானது. செய்திகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்தன.
மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை போலீஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைக் கவரும் நோக்கில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 வழங்கப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டது.
பணத்தை சேமிக்க, நல்ல வட்டி பெற இதை விட பெஸ்ட் வங்கி இல்லை! ஏன் சொல்றோம் தெரியுமா?
இதைத் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்திச் சேனலுக்கான டிஆர்பி ரேட்டிங்கை வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக, பார்வையாளர்களுக்கான ஒளிபரப்பு ஆய்வுக் குழு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது. செய்தி சேனல்களின் பார்வையாளர்கள் குறித்த தகவல் மட்டும் வெளியிடப்படும் என்றும் தனித்தனி சேனல்களின் பார்வையாளார்கள் எண்ணிக்கை வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”