சென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை - டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை - டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்

Photo Credit - Vikatan

தமிழ் நடிகர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரியும் நடிகையுமான ஜெய கல்யாணி, சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தியா கிளிட்ஸில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, தொலைக்காட்சி நடிகர்கள் இருவரும் COVID-19 காலகட்டத்தில் வேலை இல்லாத நிலையில் நிதிச் சிக்கலில் தவித்து வந்ததாக தெரிகிறது. அதனாலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரின் சிதைந்த உடல்கள் சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.

Advertisment

தொடர்ந்து அந்த வீட்டிலிருந்து சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அடையாள அட்டை ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த அடையாள அட்டையில் ஜி. ஸ்ரீதர், மெம்பர்ஷிப் நம்பர் 1719 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் இறந்தது ஸ்ரீதர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். மற்றொருவர் ஸ்ரீதரின் தங்கை ஜெயகல்யாணி என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார்கள் புகார் கூறியதாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு உடனடியாக இருவரின் உடல்களும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Advertisment
Advertisements

ராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா?

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வருமானமின்றி தவிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடிகர் ஸ்ரீதர், நடிகை ஜெயகல்யாணி ஆகியோர் பூட்டிய வீட்டுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

கீழ்தளத்தில் உள்ள வீட்டில் இவர்கள் இருவரும் குடியிருந்துவந்துள்ளனர். மாடி வீடு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இருவரும் 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்துள்ளனர். இவர்களைப் பற்றி பக்கத்தில் வசிப்பவர்களுக்குகூட எந்தத் தகவலும் தெரியவில்லை. வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசிய பிறகுதான் இருவரும் இறந்த தகவல் வெளியில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கடும் மனவருத்தத்திலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இருவரின் உறவினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் விசாரித்தால் மட்டுமே கூடுதல் தகவல் கிடைக்கும்" என்றார்.

பூட்டிய வீட்டுக்குள் அண்ணன், தங்கை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்தூரப்பூவே...இந்தா ஆரம்பிச்சுட்டாங்க டிவி சீரியல்கள்!

முன்னதாக, இந்தி தொலைக்காட்சி நடிகர்களான பிரேக்ஷா மேத்தா மற்றும் மன்மீத் க்ரூவால் ஆகிய இருவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டனர். லாக்டவுன் காரணமாக எந்த வேலையும் இல்லாததால் மனச்சோர்வு அடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

சினிமாத் துறை மட்டுமின்றி, பெரும்பாலான துறைகளில் பணியாற்றுபவர்கள் வேலையின்றி தவிக்கும் கொடுமையான சூழலை உலகமே தற்போது எதிர்கொண்டு வருகிறது. அந்தந்த நாட்டின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொறுத்தே, இனி குடிமக்களின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: