Bharathi Kannamma Serial : 'பாரதி கண்ணம்மா' சீரியலில் கண்ணம்மா கர்ப்பமானதில் வீட்டில் எல்லாருக்கும் சந்தோசம். கண்ணம்மாவை இதுவரை ஆகாது என்று பேசிவந்த மாமியார் சவுந்தர்யா கூட, வீட்டுக்கு ஒரு வாரிசு வரப்போகுதுன்னு தெரிஞ்ச உடனே ரொம்ப மகிழ்ச்சியாகிடறாங்க. கண்ணம்மா இனிமே வீட்டு வேலை செய்யறேன்.. மாப் போடறேன்னு வந்து நிற்காதே, இனி அந்த வேலை எல்லாம் நீ செய்யக் கூடாதுன்னு கண்டிக்கறாங்க. சவுந்தர்யாவின் இந்த மாற்றத்தை கண்டு எல்லாரும் ஆச்சரியமா பார்க்கறாங்க.
ஆனால், கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி மட்டும் சந்தோஷமா இல்லை. கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காதுன்னு தானே டாக்டர் சர்டிஃபிகேட் குடுத்து இருந்தாங்க.. இப்போ எப்படி என்று யோசித்துக்கொண்டு மாடியில் நிற்கிறாள். அவளுக்கு முன்னால நாம குழந்தை பெத்துக்கலாம்னா கூட குழந்தை பெத்துக்க 10 மாசம் ஆகுமே. இந்த அகில எப்படி கரெக்ட் பண்ணி சேர்ந்து.. அப்பறம் குழந்தை பெத்துக்கறது.. அதுக்குள்ளே கண்ணம்மாவுக்கு 10 மாசம் வந்துருமேன்னு யோசிச்சுகிட்டு நிற்கிறாள்.
அகில் வந்து சுவீட் பாக்ஸை அவள் முன் நீட்ட, திடுக்கிட்டு ஐயோன்னு யோசனையில் இருந்து மீண்டு வருகிறாள் அஞ்சலி. பயப்படாத அஞ்சலி நான் உன் மைண்ட் வாய்செல்லாம் கேட்கலை. ஆனா, உன்கிட்டே ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்றேன். கண்ணம்மா அண்ணி உண்டாயிட்டாங்கன்னு சொன்ன உடனே உன் மூஞ்சு மட்டும் பாவக்காய் ஜூஸ் குடிச்ச மாதிரி ஆயிருச்சு, அத கவனிச்சேன். நீ திருந்த சாய்ஸே இல்லையா அஞ்சலின்னு கேட்கறான்.
அகில் எப்படியும் என்னை நீ கலாய்க்கத்தான் வந்து இருப்ப, எதுக்கு வந்தேன்னு சொல்லுன்னு கேட்கிறாள் அஞ்சலி. ஸ்வீட் எடுத்துக்கோ என்று அவள் வாயில் திணிக்கிறான். அகில் எத்தனை நாளைக்கு இந்த கையை காலா நினைக்கறது இதெல்லாம், நமக்குன்னு ஒரு குழந்தை வேணாமா? அதை பெத்துக்கிட்டா என்னன்னு கேட்கிறாள் அஞ்சலி. அதுக்கு, அஞ்சலி ஆரம்பத்தில் நான் நாயா உன் பின்னாடி அலைஞ்சு காதலிச்சேன். அப்போ நீ என்னை மனுஷனா கூட மதிக்கலை. இப்போ உன் காதலை உடனே ஏத்துக்க எனக்கு மனசு வருமா. என் மனசு மாறாதுன்னு சொல்ல மாட்டேன். ஆனால், இப்போதைக்கு என்னால முடியாதுன்னு சொல்லி, உன் மைண்ட் வாய்ஸ் கன்டினியூ பண்ணு அஞ்சலின்னு சொல்லிட்டு போறான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"