New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-02T093107.274.jpg)
இளையராஜா
இளையராஜா
இசையை தவிர இளையராஜாவிடம் இருக்கும் இன்னொரு விஷயம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் இசைஞானி இளையராஜாவைத் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் பாட்டுகள் இன்றளவும் பலருக்கும் மனதை ஆற்றும் மருந்து. இத்தகைய இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2 தேதி தமிழ் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதையும் படியுங்கள்: செருப்புடன் நின்ற இளையராஜா; காரணம் மெடிக்கல் பிரச்னை: ரசிகருக்கு பதில் சொன்ன சினேகன் மனைவி
இந்தநிலையில், இளையராஜாவிடம் இசையை தவிர இருக்கும் விஷயம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது அவரின் நல்ல மனசு. நிறைய படங்களுக்கு சம்பளமே வாங்காமல் இசை அமைத்துக் கொடுத்துள்ளவர் இளையராஜா. இந்த விஷயம் பலருக்கும் தெரியாது. தற்போது ஒரு தனியார் நிகழ்ச்சியில் இளையராஜா அளித்த பேட்டி வாயிலாக இந்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
அந்தப் பேட்டியில், பொருளாதார நெருக்கடி இருந்த படங்களுக்கு சம்பளமே வாங்காமல் இசை அமைத்திருக்கிறேன். மணிரத்னம் முதலில் என்னிடம் வந்தப்போது, நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை என்று சொன்னார். பின்னர் அவர் இயக்கும் கன்னடப் படமான மணிச்சித்திரதாழ் படத்திற்கு, நான் அப்போது வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை தர இயலாது என்று கூறியதால், குறைவான சம்பளத்திற்கு இசை அமைத்து கொடுத்தேன். மேலும் மணிரத்னத்தை பல்வேறு தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினேன், என்று இளையராஜா கூறியுள்ளார்.
இயக்குனர் பி.வாசு முன்னர் ஒரு பேட்டியில் கூறுகையில், அவரது முதல் படமான பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு இளையராஜா சம்பளம் வாங்காமல் இசையமைத்தாக கூறியுள்ளார். இளையராஜாவிடம் வாசு சம்பளம் குறித்து கேட்டதற்கு, முதல் படம் பண்ணுறீங்க, முதல் ஜெயிட்டு வாங்க என்று இலவசமாக இசை அமைத்துக் கொடுத்தாக வாசு கூறியுள்ளார். அப்போது இளையராஜாவின் சம்பளம் 1 லட்ச ரூபாய். ஆனால் வாசு எடுத்த படத்தின் பட்ஜெட்டே ரூ. 5 லட்சம் தான்.
இதேபோல், பிரதாப் போத்தன், மணிவண்ணன், மனோபாலா போன்ற இயக்குனர்களுக்கும் இளையராஜா சம்பளம் வாங்காமல் இசை அமைத்து கொடுத்ததாக கூறியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.