பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் மீது நடிகர் சித்தார்த் சாடல்: ‘தூத்துக்குடி கொலை பற்றி பேசுங்கள்’

துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பிற்கு பிறகு தான் தமிழக அரசு  ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடுவதாக அறிவித்தது.

நடிகர் சித்தார்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு  ஆதரவாக பேசிய பாபா ராம்தேவ் மற்றும் ஜக்கி வாசுதேவை ட்விட்டரில் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை  சமீபத்தில்  மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.   ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  தூத்துக்குடியில் நடைப்பெற்று வந்த போராட்டம் 100 ஆவது நாள் கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடும் நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பிற்கு பிறகு தான் தமிழக அரசு  ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடுவதாக அறிவித்தது. தமிழக அரசின் இந்த செயலையும் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.  ஆலையை மூடியது தான் இறந்தவர்களுக்கு தமிழக அரசு செய்யும் இறுதி அஞ்சலி என்று போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,  கோவை ஈஷா நிறுவனத்தின் தலைவர் ஜக்கி வாசு தேவும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபாராம் தேவும் ஒருசேர இணைந்து  ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என்பது போல் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவர்களின் கருத்து  பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருக்கும் நிலையில்,  நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் கருத்து குறித்து கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட்டை மூடுவது பொருளாதார தற்கொலை’

இதுக்குறித்து ட்விட்டரில்  சித்தார்த் கூறியிருப்பது,முதலமைச்சரின் அலுவலகம் நாணயமற்ற ஒன்று. யோகாவைத் தவிர பிரதமரின் அலுவலகம் வேறு எதற்கும் வாய் திறக்காது. தாமிர உருக்கின் பயன்களை பட்டியலிட இது நேரமில்லை. மக்கள் போலீஸாரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். குடிமக்களை சுடுவது என்பது கொலையாகும். இப்போது அதைப் பற்றி பேசுங்கள்”  என்று கடுமையாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் சித்தார்த் #AntiSocials என்ற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தமிழ்க அரசால் மூடப்பட்ட தொழிற்சாலைக்கு ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் மாறி மாறி ஆதரவான கருத்துக்களை தெரிவிப்பதிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close