ஸ்டெர்லைட் போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது நாட்டின் பொருளாதார தற்கொலை என்று ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைப்பெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடவில்லை. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக்கோரி 99 நாட்களாக அமைதி வழியில் நடந்த போராட்டம் 100 ஆவது நாளன்று கலவரத்தில் முடிந்தது. போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் பின்பு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டது. ஆலையம் மூடப்பட்டது குறித்து, தூத்துக்குடி போராட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்த நிலையில் தற்போது ஈஷா நிறுவரான ஜக்கி வாசுதேவ் ஆலை மூடப்பட்டது தவறு என்ற நோக்கி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை ” என்று கூறியுள்ளார்.
ஆதரவாக பேசியவர்களை ட்விட்டரில் விளாசிய சித்தார்த்!
/tamil-ie/media/media_files/uploads/2018/06/1-6.jpeg)
ஜக்கியைப் போலவே, பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் சில தினங்களுக்கு முன்பு லண்டன் சென்றிருந்தார். அப்போது அங்கிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் முக்கிய தலைவர்களையும் சந்தித்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கக் கூடாது, அது துரதிஷ்டவசமானது என கருத்து தெரிவித்திருந்தார்.