Advertisment
Presenting Partner
Desktop GIF

என் வளர்ச்சியை தடுப்பவர்கள் இவர்கள் தான்: நேசமணிக்கு பிறகு வாய் திறந்த வடிவேலு!

Vadivelu on Imsai Arasan: இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் எனக்கு உடன்பாடில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vadivelu, tamil nadu news today live

Vadivelu on Imsai Arasan: கடந்த சில தினங்களாக ‘ப்ரே ஃபார் நேசமணி’ என்ற ஹேஷ் டேக் இணையத்தில் வைரலானது.

Advertisment

Pray For Nesamani: ஹர்பஜன் சிங்கையும் கலங்கடித்த ’காண்ட்ராக்டர் நேசமணி’!

எப்போதும் மீம்களால் இணையவாசிகளை மகிழ்விக்கும் வடிவேலு, இந்த முறை தான் 18 வருடங்களுக்கு முன்பு நடித்த ’நேசமணி’ கேரக்டரால் உலக அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

இந்நிலையில், நேசமணி குறித்து கருத்துக் கேட்க பல மீடியாக்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரை தொடர்பு கொண்டனர்.

அதில் ஒரு முன்னணி செய்தித்தாளுக்கு வடிவேலு அளித்த பேட்டியில் ’இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ திரைப்படத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

“எனது யோசனை இல்லாமல் எப்படி இம்சை அரசன் படம் எடுக்க முடியும்? படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். அதனால் படத்திற்கு எனது முழு ஈடுபாடு இருக்க வேண்டும். அது இல்லாமல் எப்படி வெற்றி பெற முடியும்.

ஆக்‌ஷனும் காமெடியும் வேறு வேறு. எனக்கும் ஆக்‌ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இம்சை அரசன் 23-ம் படத்தில் கூட எனது மாமாவாக நடித்த நாசரை கொல்ல சொன்னார்கள். திரையில் கூட யாரையும் கொல்வதற்கு எதிரானவன் நான். ஆகவே அந்த சீனை மாற்றினார்கள்.

அதே மாதிரி இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் எனக்கு உடன்பாடில்லை. நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் வாருங்கள் பேசுவோம் என்கிறார்கள். நான் ஏன் போக வேண்டும்? நான் நடிக்கத் தயார். நீங்கள் சொல்வது சரியென்றால் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து என் வளர்ச்சியை முடக்குகிறார்கள். என் கையில் 10 படங்கள் உள்ளது. ஆனால் நடிக்க முடியவில்லை” என்றார்.

 

Vadivelu Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment