/tamil-ie/media/media_files/uploads/2020/01/Vani-Bhojan-Latest-Images.jpg)
Vani Bhojan Latest Images
Vani Bhojan: சமீபகாலமாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அப்படியானவர்கள் வெள்ளித்திரைக்கும் படையெடுத்து வருகிறார்கள்.
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
அந்த வகையில் பிரியா பவானி சங்கரை அடுத்து தெய்வமகள் சீரியலில் நடித்த சத்யாவும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பான தெய்வமகள் சீரியலின் மூலம் மிகவும் பிரபலமான வாணிபோஜன் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக அடிக்கடி ஃபோட்டோஷூட் நடத்தி, அந்த படங்களை இணையத்தில் வெளியிடுவது நடிகைகளின் பொதுவான விஷயம். அந்த வகையில் வாணியும் நிறைய ஃபோட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.
சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை வாணி போஜன்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வ மகள்’ சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அழகு ஆங்கர் டிடியின் அசத்தலான போட்டோ தொகுப்பு….
சின்னத்திரையில் சில சீரியல்களில் ஹீரோயின், ரியாலிட்டி ஷோ-க்களில் நடுவர் என்றிருந்த வாணியின் கவனம் மெதுவாக வெள்ளித்திரை பக்கம் திரும்பியது.
இதனைத் தொடர்ந்து, நிதின் சத்யா தயாரிக்கும் ’லாக்கப்’ என்ற படத்தில் நடிக்க கமிட்டானார்.தங்க நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் பிரியங்காவின் படத்தொகுப்பு!
தெலுங்குப் படமொன்றிலும் நடித்திருக்கும் வாணி, தற்போது ‘ஓ மை கடவுளே’ என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.
’ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையின் நயன்தாரா எனவும் வாணி போஜனுக்கு செல்லப் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us