Advertisment

வருங்கால கணவருடன் முதன்முறையாக ஃபோட்டோ வெளியிட்ட வனிதா விஜயகுமார்

நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் செய்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar first picture with fiance

Vanitha Vijayakumar first picture with fiance

நடிகர்கள் விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயக்குமார், ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இருப்பினும் விரைவிலேயே நடிப்பிற்கு முழுக்குப் போட்டார். கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பாப்புலரானார். பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’யில் கலந்துக் கொண்டு, வெற்றி பெற்றார். இந்த லாக்டவுன் நேரத்தில் யூ ட்யூப் சேனல் ஒன்றையும் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஸ்மைலிங் அனுபமா, க்யூட் அனுஷ்கா: முழு புகைப்படத் தொகுப்பு

,

மற்ற வங்கிகளை விட எஸ்பிஐ-யில் கிரேடிட் கார்டு வட்டி ரொம்ப ரொம்ப கம்மி!

இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அவரது புகைப்படம் மற்றும் திருமண பத்திரிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இவர்களது திருமணம் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. "அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று சில தினங்களுக்கு முன்பு வெளியான பேட்டியில் பீட்டர் குறித்து, மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் வனிதா. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் தங்கள் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் செய்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திருமணத்துக்கு அனுமதி வாங்க, வனிதாவும் பீட்டரும் சென்றிருக்கிறார்கள். அந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment