/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1950.jpg)
coronavirus, vanitha vijayakumar
நடிகையும், பிக் பாஸில் பிரபலமானவருமான வனிதா விஜயகுமார், சினிமா டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இந்தத் திருமணம் திரைப்படத் துறையினரிடமிருந்தும், மற்ற சிலரிடம் இருந்து விமர்சனங்களைப் பெற்றது. அதோடு தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல், பீட்டர் பால் மறுமணம் செய்துக் கொண்டதாக, அவரது மனைவி, எலிசபெத் ஹெலன் காவல்துறையில் புகார் அளித்தார்.
’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்!
அதோடு தங்களது திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு உடனடியாக ட்விட்டர் பக்கத்திலும், வீடியோக்களிலும் பதிலடி கொடுத்து வந்தார் வனிதா. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலருக்கு தனது பதிலடியைக் கொடுத்தார். இந்நிலையில் சூர்ய தேவி என்ற பெண் வனிதாவை தமிழில் தவறான வார்த்தைகளால் ட்ரோல் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தனது பேச்சில் வனிதாவுக்கு மிரட்டல்களையும் தெரிவித்தார்.
பிரபல சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு போடுகிறதா சன் டிவி?
இந்நிலையில் அந்த பெண் மீது, போரூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் வனிதா போலீஸில் புகார் அளித்துள்ளார். முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக கருத்துகளை வெலியிட்டவர் தான் இந்த சூர்ய தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.