நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், சில வாரங்களுக்கு முன்பு சினிமா டெக்னீஷியன் பீட்டர் பாலை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவரது முன்னாள் மனைவி, தாங்கள் இன்னும் விவாகரத்து செய்துக் கொள்ளவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் செய்திகளில் இடம்பெற்ற வனிதா விஜயகுமார், மீண்டும் சினிமா வட்டாரத்தில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார்.
90’ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத சூர்யா பாடல்கள்!
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் சூர்ய தேவி (வனிதாவுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வருபவர்) தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவித்திருப்பதால், அவர்கள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார் வனிதா. அவருடன் அவரது வழக்கறிஞர் ஸ்ரீதரும் இருந்தார்.
வனிதா கூறுகையில், “நான் எந்த காரணமும் இல்லாமல், முன் பின் தெரியாத ஒரு பெண்மணியால் தாக்கப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவரும், எனது குழந்தைகள் உட்பட எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் அதைப் புறக்கணிக்க நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். சைபர் மிரட்டல் மற்றும் கேரக்டர் அஸாசினேஷன் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதால் நான் எதிர்வினையாற்ற வேண்டும் என்று உணர்ந்தேன். ஓரிரு நாட்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரிடமிருந்து எனக்கு உறுதி கிடைத்துள்ளது” என்றார்.
வனிதா தன்னை ’பாடி ஷேமிங்’ செய்து, அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார் ரவீந்தர். ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டியில், “அவர் ஒரு விளம்பர பசியுள்ள நபர். மற்றவர்களுடன் திமிர்பிடித்த விதத்தில் உரையாடுகிறார். அவருக்கு விருப்பமான ஒருவரை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்று நான் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை. மணமகன் தனது முன்னாள் மனைவியிடமிருந்து சட்டபூர்வமாக பிரிந்து செல்லாமல் திருமணம் நடந்ததால் தான் முழு பிரச்சினையும் தொடங்கியது. சட்டத்தை மீறுவதும் மற்றொரு குடும்பத்தை கெடுப்பதும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் வராது” என்றார்.
கருவேப்பிலை எண்ணெய்: எவ்வளவு நன்மை பாருங்க!
இதற்கிடையில், சூர்யா தேவி தனது போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக ஒருவருடன் உரையாடியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் கூறினார். "நான் விரைவில் ஆடியோ கிளிப்பை வெளியிடுவேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும் கூறுகையில், கலக்க போவது யாரு புகழ் நாஞ்சில் விஜயனுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு, என்றார். “சூர்யா வனிதாவை அச்சுறுத்தியதற்கான வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. நான் சமர்ப்பித்த கிளிப்பில் சூர்யாவின் குரலை சரிபார்க்க உதவி ஆணையர் அலுவலகத்தை கோரியுள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், தொற்றுநோய் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது இப்போது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. சமூக ஊடக பயனர்களின் தாக்குதலுக்கு வனிதா பலியாகியுள்ளார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இணைய அச்சுறுத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக வலுவான சட்டம் இல்லை” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”