/tamil-ie/media/media_files/uploads/2020/07/Vanitha-Vijayakumar-Peter-Paul-Wedding-unseen-video.jpg)
Vanitha Vijayakumar Peter Paul Wedding unseen video
Vanitha Vijayakumar: பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான வனிதா விஜயகுமார், பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் புகழ் பெற்றார். அவர் திரைப்பட இயக்குநர் பீட்டர் பாலை கடந்த ஜூன் 27-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். இதற்கிடையே பீட்டர் பாலின் முதல் மனைவியால் இந்தத் திருமணத்துக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனக்கு முறையான விவாகரத்து தருவதற்கு முன்பாக, வனிதாவை அவர் திருமணம் செய்துக் கொண்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்நிலையில், வனிதா தனது யூடியூப் சேனலின் நேரலையில் பீட்டர் பால் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அவரை பெண்பித்தன் மற்றும் குடிகாரன் என்று அழைத்தவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார். பீட்டர் ஒரு டீடோட்டலர் என்றும், திருமண நாளில் ஓபன் செய்த, ஷாம்பெயினை கூட அவர் குடிக்கவில்லை என்றும் வனிதா தெளிவுபடுத்தினார்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்; கொலை வழக்காக மாற்றம்; எஸ்.ஐ கைது
பீட்டர் ஒரு நான்-ஆல்கஹாலிக் பானத்தைக் குடித்ததாகவும், அதே நேரத்தில் திருமணம் என்பதால், தான் மட்டும் ஷாம்பெயின் குடித்ததாகவும் கூறிய வனிதா, அந்த காட்சிகளை தான் வெளியிடுவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தனது யூ-டியூப் சேனலில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார் வனிதா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.