scorecardresearch

‘எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் பீட்டர் பால்’: வனிதா விஜயகுமார் உருக்கமான பதிவு

நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில், நீங்கள் இப்போது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும்; பீட்டர் பால் மறைவுக்கு வனிதா விஜயகுமார் உருக்கமான பதிவு

Vanitha Vijayakumar
வனிதா விஜயகுமார்

நீங்கள் சந்தித்த துயரங்கள் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன் என நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவர் பீட்டர் பால் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் உடன் சந்திரலேகா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. பின்னர் சில திரைப்படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். முதல் 2 திருமணங்களில் இருந்து வெளியேறிய வனிதா, பின்னர் சினிமா, சின்னத்திரை என மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். இந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விஷூவல் எஃபெக்ட் டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.

இதையும் படியுங்கள்: கேப்டன் சொன்னதை மீறி எஸ்.ஏ.சி மோசடி: விஜயகாந்த் மாஜி மேனேஜர் ஷாக் புகார்

இந்தநிலையில், நடிகை வனிதாவின் 3 ஆவது கணவர் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இரங்கல் தெரிவித்தார். அதில், “என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார். இந்த பாடத்தை எல்லோரும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், எல்லோருமே அவரவர் பாதையைத் தேர்வு செய்கிறார்கள்.

நீங்கள் சந்தித்த துயரங்கள் மற்றும் அனுபவித்த கஷ்டங்களுடன் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள். நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில், நீங்கள் இப்போது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்” என வனிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vanitha vijayakumar shares heartfelt post to peter paul death

Best of Express