Advertisment

விஜய் டி.வி-க்கு வந்த வனிதா மகள் ஜோவிகா: அடுத்த படம் இந்த நடிகருடன்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மகளுடன் கலந்துக் கொண்ட நடிகை வனிதா; ஜோவிகா வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளாரா என ரசிகர்கள் கேள்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vanitha jovika

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மகளுடன் கலந்துக் கொண்ட நடிகை வனிதா

நடிகை வனிதா தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது மகளோடு கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

வெள்ளித்திரையில் நடிகை விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தொடர்ந்து சிலப் படங்களில் நடித்த நடிகை வனிதா திருமணத்திற்குப் பின் திரைத்துறையை விட்டு சிலகாலம் விலகி இருந்தார். பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை வனிதா. தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: என் பெருமை, மகிழ்ச்சி… 8 மாத கர்ப்பிணியாக பிரபல சீரியல் நடிகை : போட்டோஷூட் வைரல்

இருப்பினும் வனிதாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் திருப்புமுனையை ஏற்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் சீசனில் கலந்துக் கொண்ட வனிதா டைட்டில் வின்னர் ஆனார். தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்துக் கொண்டார். சின்னத்திரை, வெள்ளித்திரை என மாறி மாறி கலக்கிக் கொண்டிருக்கும் வனிதா, யூடியூப் மூலமாக சில பிரபலங்களை பேட்டி எடுத்தும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரிவ்யூ கொடுத்தும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் வனிதா கலந்து கொண்டுள்ளார். ஆனால் இந்த முறை வனிதா தனது மகள் ஜோவிகாவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனையடுத்து அம்மாவை தொடர்ந்து மகளும் சின்னத்திரையில் அறிமுகம் ஆகிவிட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், வனிதாவின் மகள் ஜோவிகா திரைத்துறையில் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறும் ரசிகர்கள் அதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

publive-image

இதற்கிடையில் நடிகை வனிதாவின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் தாஸோடு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, வனிதாவின் மகள் அர்ஜுன் தாஸ் உடன் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் வனிதாவின் மகள் ஜோவிகா அந்தப் புகைப்படங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது எடுத்துக்கொண்டவை என தெளிவு படுத்தி இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar Vijay Tv Cook With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment