வனிதா பற்றி கேட்ட ரசிகர்; மகன் அளித்த பதில் என்ன தெரியுமா?

வனிதா குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்; அவரது மகன் அளித்த பதில் என்ன தெரியுமா?

வனிதா குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்; அவரது மகன் அளித்த பதில் என்ன தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வனிதா பற்றி கேட்ட ரசிகர்; மகன் அளித்த பதில் என்ன தெரியுமா?

Vanitha Vijaykumar’s son Sri Hari shocking answer to fan: நடிகை வனிதா விஜயகுமாரின் மகன், அவருடன் பேசுவது இல்லை என கூறப்படுகிறது.

Advertisment

பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் வெகு நாட்களுக்குப் பிறகு லைம்லைட்டிற்கு வந்தவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்த வனிதா விஜயகுமார், நடிகர் விஜய் உடன் சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் கொஞ்சம் நாள் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இந்தநிலையில், 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பின்னர் வனிதாவுக்கும் ஆகாஷூக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2005 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தார்கள்.

இதில் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்ற கேள்வி, கோர்ட் வரை சென்ற நிலையில், தந்தை ஆகாஷூடன் இருக்க கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் வனிதா மறுமணம் செய்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடிய தற்போது மகள்களுடன் வசித்து வருகிறார் வனிதா.

Advertisment
Advertisements

இதையும் படியுங்கள்: கைநிறைய படங்கள்… குளிர் பிரதேசத்தில் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி!

இந்தநிலையில், சமீபத்தில் தனது 21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதாவின் மகன் ஸ்ரீஹரிக்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அதில், என் முதல் மற்றும் என்றென்றும் அன்புக்குரியவனே …அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு தாய் தன் குழந்தைகளை நேசிப்பதே அன்பின் தூய்மையான வடிவமாகும்…அம்மாவாக என் 21வது பிறந்தநாள் இன்று... எனக்கு முதலில் பிறந்த @vijaysrihari23 இன்றோடு 21 வயதாகிறது... அழகான மற்றும் வலிமையான விருப்பமுள்ள மிகவும் திறமையான மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நீங்கள் எப்போதும் என் லட்டுவாகவே இருப்பீர்கள் ... கடவுள் உங்கள் கனவுகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார், என்று பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்ரீஹரியிடம் நீங்கள் வனிதா மகனா என இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ஸ்ரீஹரி, நான் ஆகாஷோட மகன் ப்ரோ என பதிவிட்டார். இதனால் ஸ்ரீஹரி தனது அம்மாவுடன் பேசுவது இல்லை என தெரிகிறது.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: