/tamil-ie/media/media_files/uploads/2020/07/New-Project-15.jpg)
Varalakshmi Sarathkumar: கொரோனா வைரஸ் காரனமாக அனைத்து துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சினிமா துறை மிகப்பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது. வைரஸின் தொற்று குறைந்து, எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என யாருக்கும் தெரியவில்லை.
மொபைல் ஃபோன் அவசியம்.. பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு!
இதனால் பாலிவுட்டைப் போல், தமிழ் படங்களும் ஆன்லைனில் வெளியீட்டை தொடங்கியுள்ளன. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ ஆகியப் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து, நடிகையருக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனைத்தும், தற்போது, 'ஆன்லைன்' தளத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதில் வரலட்சுமி சரத்குமார் நடித்த, டேனி படம், ஆகஸ்ட் 1-ம் தேதி 'ஜீ 5' தளத்தில் வெளியாக உள்ளது.
பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோர் கருத்தை கேட்கும் மத்திய அரசு
இது குறித்து பேசிய வரலட்சுமி, “டேனி படத்தில், கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நானும், எனக்கு துணையாக, டேனி என்ற நாயும் நடிக்கிறது. இங்கு தான், இன்னாருக்கு முக்கியத்துவம் உள்ள கதை என, பார்க்கிறீர்கள். ஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை. கதைக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். 'சேவ்சக்தி' அமைப்பு மூலம், என்னால் முடிந்த பணிகளை செய்கிறேன். நான் ஏற்கனவே, குறைவான சம்பளம் தான் வாங்குகிறேன். கொரோனாவுக்காக, தனியே சம்பளத்தை குறைக்க வேண்டியதில்லை. நிச்சயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் இப்போதைக்கு இல்லை. அப்பா கட்சியிலும் சேர மாட்டேன்” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.