Varalakshmi Sarathkumar: விஜய் நடித்த 'சர்கார்' மற்றும் தனுஷின் 'மாரி 2' ஆகிய படங்களின் மூலம் ஈர்க்கப்பட்ட நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தற்போது கோலிவுட்டில் பரபரப்பான நடிகைகளில் ஒருவராகியிருக்கிறார். இந்த திறமையான நடிகை சமீபத்திய காலங்களில், சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
’அன்னக்கிளி’யில் ஏற்பட்ட பந்தம்: இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் மறைவு
இதற்கிடையில், வரலக்ஷ்மி சரத்குமார் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என செய்திகள் பரவின. தோனி மற்றும் விராட் கோலியுடன் நெருங்கிய நட்பைக் கொண்ட ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை தான் அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த செய்திகளுக்கு தற்போது பதிலளித்துள்ளார் வரலக்ஷ்மி.
Corona Live Updates: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49.82 லட்சமாக உயர்வு
தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கியுள்ள வரலக்ஷ்மி, "நான் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் விஷயத்தை நான் ஏன் கடைசியாக அறிகிறேன்?? ஹாஹாஹா அதே முட்டாள் தனமான வதந்திகள்.. ஏன் எல்லோரும் நான் திருமணம் செய்து கொள்வதை தெரிந்துக் கொள்ள வெறித்தனமாக இருக்கிறார்கள்.. நான் திருமணம் செய்துக் கொள்வதென்றால், கூரை உச்சியில் இருந்து உரக்கக் கத்துவேன். அனைத்து மீடியா மக்களுக்கும், நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. திரைப்படங்களை விட்டு விலகவுமில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”