’இது முதல் முறையல்ல’: பாடகி எஸ்.ஜானகி மரணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஜானகியுடன் பல பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மக்கள் அதிக பொறுப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

By: Updated: June 29, 2020, 01:01:13 PM

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைந்து விட்டதாக வழக்கம்போல் இணையத்தில் வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து, ஜானகியின் குடும்ப உறுப்பினர்கள், ஒரு சின்ன ஆபரேஷனுக்குப் பிறகு அவர் “ஆரோக்கியமாகவும் நலமாகவும்” இருப்பதாகக் கூறியுள்ளனர். பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, இயக்குநர் – நடிகர் மனோபாலா ஆகியோரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த மாதிரியான வதந்திகளை இனி யாரும் பரப்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

’அவர் மீது நடவடிக்கை எடுங்கள்’: பீட்டர் பால் மனைவி போலீஸ் கம்ப்ளைண்ட்

“ஜனகியம்மாவிடம் பேசினேன். அவர் மைசூரில் நலமாகவும்  ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்” என மனோ ட்வீட் செய்துள்ளார்.

மனோபாலா ட்விட்டரில், “இல்லை… இது தவறான செய்தி. அவருக்கு ஒரு சிறிய ஆபரேஷன் நடந்து இப்போது நலமாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜானகியுடன் பல பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மக்கள் அதிக பொறுப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் பாடகி ஜானகியுடன்  பேசியதாகவும், அவர் நன்றாக இருக்கிறார் என்றும் கூறினார்.

“காலையிலிருந்து, ஜானகி அம்மாவின் நலன் குறித்து எனக்கு சுமார் இருபது அழைப்புகள் வந்தன. யாரோ ஒருவர் சோஷியல் மீடியாவிலோ அல்லது வேறு எதோ வழியிலோ ஜானகியம்மா இல்லை என்று சொல்லியிருக்கிறார். இது என்ன முட்டாள்தனம்? நான் அவருடன் பேசினேன், அவர் நன்றாக இருக்கிறார். என்ன நடக்கிறது இங்கே? மக்கள் சில கலைஞர்களை இதயப்பூர்வமாக விரும்புகிறார்கள். இந்த மாதிரி பொய் செய்திகள் அவர்களுக்கு மாரடைப்பை கூட ஏற்படுத்தும். பாஸிட்டிவிட்டிக்கு சமூக ஊடகத்தைப் பயன்படுத்தவும். இந்த விஷயங்களை கேலி செய்ய வேண்டாம். நெகட்டிவான விஷயங்களுக்கு சமூக ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டாம். ஜானகி அம்மா நீண்ட காலம் வாழ்க” என வீடியோவையும் வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

மேலும் இது தொடர்பாக ஜானகி-யின் மகன் முரளி கிருஷ்ணா, ஜானகி அம்மாவுக்கு ஒரு சின்ன அறுவை சிகிச்சை நடைபெற்று, மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய் குறித்து அடிக்கடி பரவி வரும் வதந்தி குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தண்ணீருக்குள் ஸ்ருதி ஹாசன்: அட்டகாசமான த்ரோபேக் படங்கள்!

இதனிடையே, இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தீனா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் “எஸ்.ஜானகி அம்மா தவறிவிட்டதாக தவறான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது தான் எஸ்.பி.பி அண்ணாவிடம் பேசினேன். அவர் உடனே ஜானகி அம்மா குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசினார். ஜானகி அம்மா நன்றாக சிரித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். எந்தவித பயமும் இல்லை. ஆகையால் எந்தவொரு தவறான தகவலையும் பரப்பாதீர்கள்” என்றுக் கேட்டுக் கொண்டுள்ளார்.

எஸ்.ஜானகி 1957-ஆம் ஆண்டு விதியின் விலையாட்டு என்ற தமிழ் திரைப்படத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 48,000 பாடல்களைப் பாடியுள்ள அவர், 2016-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Veteran singer s janaki death rumors clarification

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X