Advertisment

’அவர் மீது நடவடிக்கை எடுங்கள்’: பீட்டர் பால் மனைவி போலீஸ் கம்ப்ளைண்ட்

"முறையாக விவாகரத்து பெற்ற பிறகே வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொள்வேன் என்று பீட்டர் பால் என்னிடம் தெரிவித்தார். ஆனால் விவாகரத்து பெறாமேலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்."

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar, Peter Paul son shocking allegations

Vanitha Vijayakumar, Peter Paul

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா, கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது பீட்டரின் மனைவி, எலிசபெத் ஹெலன் அவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

தண்ணீருக்குள் ஸ்ருதி ஹாசன்: அட்டகாசமான த்ரோபேக் படங்கள்!

பட வாய்ப்பு சம்பந்தமாக கடந்த டிசம்பரில் சந்தித்த வனிதாவுக்கும்  சினிமா டெக்னீசியன் பீட்டர் பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த சனிக்கிழமை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள். சென்னையில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே அத்திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

பின்னர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகின. குறிப்பாக அந்த லிப் டூ லிப் முத்தப் படம் சர்ச்சையையும் கிளப்பியது. இதற்கிடையே தற்போது வனிதாவின் புதிய வாழ்க்கையின் தொடக்கத்திலேயே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வனிதாவை திருமணம் செய்துக் கொண்டுள்ள, பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், ”எனக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. முறையாக விவாகரத்து பெற்ற பிறகே வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொள்வேன் என்று பீட்டர் பால் என்னிடம் தெரிவித்தார். ஆனால் விவாகரத்து பெறாமேலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதனால் வனிதா விசிறிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tamil News Today Live : சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன்… ப.சிதம்பரம் பதிவு!

முன்னதாக நடிகர் ஆகாஷை திருமணம் செய்துக் கொண்ட வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி, ஜோவிகா என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். பின்னர் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு ராஜன் என்ற தொழிலதிபரை மணந்துக் கொண்டார். இவர்களுக்கு ஜெய்னிதா என்ற மகள் இருக்கிறார். பின்னர் ராஜனிடம் இருந்தும் விவாகரத்துப் பெற்றார். தற்போது இரண்டு மகள்களுடன் வசித்து வரும் வனிதா பீட்டரை 3-வதாக கரம் பிடித்திருக்கிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment