பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் என தந்தை- மகன் இறந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்புவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 30) முடிவடை கிறது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக் காத நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன. தமிழகத்தில், ஊர டங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
வேலூரில் புதிதாக 129 பேருக்கு கொரோனா பாதிப்பு. இன்று காலை நிலவரப்படி 129 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,378ஆக உயர்வு. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை,வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பால் விற்பனையாளர்களுக்கு மிரட்டல் : சர்ச்சையில் மீண்டும் போலீஸ் – விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 35 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் ஆயிரத்து 79 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு ஜூன் மாதத்தில் மிக மிக அதிகம் என சுகாதாரத்துறையின் அறிக்கை சொல்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today Live : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சுங்கச்சாவடியில் போலீசாருடன் மோதிய அரசியல் பிரமுகர்: வைரல் வீடியோ!
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து என்பவர், தனது முகநூல் பக்கத்தில் காவல்துறையினரை களங்கப்படுத்தும் விதமாக சாத்தான்குளம் நிகழ்வை பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, தனது முகநூல் கணக்கின் ரகசிய குறியீட்டு எண்ணை நண்பர்களிடம் பகிர்ந்திருந்ததாகவும், தான் அந்த பதிவை பதிவிடவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், சதீஷ் முத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். பொது முடக்கம் நீடிப்பு, சீன விவகாரம் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இது அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட விரும்பவில்லை என மதுரை ஐகோர்ட் பெஞ்ச் கூறியது.
இந்நிலையில் இந்த சாத்தான்குளத்தில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் என தந்தை- மகன் இறந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்புவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளுர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்று அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களிலும் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்று அறிவித்துள்ளது.
திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் அரசியல் லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சாத்தான்குளம் காவல் உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்துள்ளது. சாத்தான்குளம் கூடுதல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் நாளை ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,253 ஆக அதிகரித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜூலை 1-ம் தேதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை கணபதி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், “சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மரணமடைந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறேன். சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சாத்தான் குளம் வியாபாரிகள் மரண விவகாரத்தை திமுக அரசியல் ஆக்குகிறது. ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சொல்லக் கூடாது” என்று கூறினார்.
மாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எனத் தகவல்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு முடிவு செய்யலாம் என பரிந்துரைத்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக உறவினர்கள் உள்ளிட்டோரிடம் நீதிபதிகள் விசாரணை நடந்து வருகிறது. திருச்செந்தூர் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணை நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும். கலால் வரியை உடனடியாக குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 27 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி அருண்கோபாலன் தெரிவித்துள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர், காவலர்கள் உட்பட 27 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் கொரானா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். புதிதாக 19 ஆயிரத்து 459 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 லட்சத்து 10 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 16 ஆயிரத்து 475 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
”ஒருவருக்கு கொரோனா உறுதியானால் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். முடிவு வரும் வரை கொரோனா பரிசோதனை செய்த நபர் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது சமுதாய பிரச்சானை என்பதால் உதயநிதி முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்கள் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உதயநிதி தூத்துக்குடி சென்றாக கூறப்படுகிறது.
இன்று காலை முதல் முதல்வருடன் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடந்தது. அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதில் “ ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை . ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை . சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது .
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை . அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் சுவை, மணம் தெரியாவிட்டால் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா இருப்பதால் பயப்பட வேண்டாம். ” என்று கூறியுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கனிமொழி எம்.பி மீண்டும் புகார் அளித்துள்ளார்.
10ஆம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியலுக்கு ஒரே புத்தகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11,12ஆம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே புத்தகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தொடர்பாக வெளியிடும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு, குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மட்டுமே மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்க கோரி தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதற்கு, அரசின் கொள்கை முடிவிற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவர்களுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டம் நிறைவு அடைந்த பின்பு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையே உகந்தது, இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 1996 டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையே உகந்தது, இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
லாக்டவுன் காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரும் போது எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து நீதிமன்ற உத்தரவுகள் இருக்கிறது. யார் மனதையும் புண்படும் வகையில் பேசக்கூட கூடாது, அடிப்பது சட்டப்படி தவறு என அனைத்து காவல்துறையினருக்கும் வலியுறுத்தி உள்ளோம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிட்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக பெர்னார்ட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெர்னார்ட் சேவியர் இன்று ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே வடசேரி காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.