/tamil-ie/media/media_files/uploads/2020/07/Dhanush-Vetri-Maaran-Movie.jpg)
’வட சென்னை’ படபிடிப்பில் தனுஷ் - வெற்றி மாறன்.
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குனர்-நடிகர் காம்போவில் ஒன்று வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி. தனுஷ் கதாநாயகனாக நடித்த பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானார் வெற்றி மாறன். பின்னர் தேசிய விருது பெற்ற ’ஆடுகளம்’, ’வட சென்னை’ மற்றும் ’அசுரன்’ ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றினர்.
’நாயகி’ சீரியலில் ’தெய்வமகள்’ டீம்: ஹீரோ, ஹீரோயின் எல்லாத்தையும் மாத்திட்டாங்கய்யா
#வாடிவாசல்#Vaadivasalpic.twitter.com/smEdgnavXL
— Vetri Maaran (@VetriMaaran) July 23, 2020
’வட சென்னை 2’ படத்தை அவர்கள் அறிவித்திருந்தாலும், எல்ரெட் குமார் தயாரிக்கும் ஒரு படத்திற்கு வெற்றி மாறனும், தனுஷும் மீண்டும் இணைவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மூவருக்கும் இடையில் சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
விஜய் டிவி திரும்பிய ரச்சிதா: முக்கிய சீரியலின் 2-ம் பாக கலக்கல் ப்ரோமோ!
இதற்கிடையில், வெற்றி மாறன், நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘வாடி வாசல்’ படத்தில் பணியாற்றுகிறார். இதன் சுவரொட்டி நேற்று வெளியிடப்பட்டது. அதோடு சூரி கதாநாயகனாக நடிக்கும், ஒரு படத்தையும் அவர் அறிவித்துள்ளார். இதையும் எல்ரெட் குமாரே தயாரிக்கிறார். மறுபுறம் தனுஷ், கார்த்திக் சுப்பராஜுடன் ’ஜகமே தந்திரம்’, மாரி செல்வராஜுடன் ’கர்ணன்’, பாலிவுட்டில் ஆனந்த் எல் ராயின் ’அட்ரங்கி ரே’ ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.