கோவையில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட ‘வாரிசு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கைகளை தட்டி, உற்சாக நடனமாடி பெண்கள் ரசித்தனர்.

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது.
இதையும் படியுங்கள்: ஹீரோ ஆனதும் இரவில் வீடு தேடி வந்த ரஜினி: நடிகை நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் பார்வையாளர்களாக உள்ள சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.

கோவையை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கத்தில் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி ஒளிப்பரப்பப்பட்டது. இதில் பெண்கள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் இருந்த காட்சியில், பெண்கள் உற்சாக நடனமாடி கைகளை தட்டி வாரிசு படத்தை கண்டு ரசித்தனர்.

பெண்களுக்கு மட்டும் நடைபெற்ற வாரிசு பட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil