விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'நா ரெடி' பாடல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆராவார வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Advertisment
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களுக்கும், ரசிகர்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். இவரது படங்கள் வெளியானலே அந்த நாள் ரசிகர்களுக்கு திருவிழா தான் என்ற நிலையில், தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விஜய் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கும் ஆரம்பம் முதலே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisment
Advertisements
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், வையாபுரி, மடோனா செபாஸ்டியன், கதிர், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
இந்தநிலையில், நடிகர் விஜய் இன்று (ஜூன் 22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக லியோ படத்தில் விஜய் பாடியுள்ள ‘நா ரெடி’ என்ற பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக படக்குழு வெளியிட்டுள்ளது.
சரியாக மாலை 6.30 மணிக்கு வெளியான பாடல், இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடலை, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இரவு முதலே ட்ரெண்ட் லிஸ்டில் இடம்பிடித்துள்ள நிலையில், இந்த லிரிக்கல் பாடலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியலில் களமிறங்க அஸ்திவாரம் போட்டு வரும் நிலையில், இந்த பாடலில் அவர் அரசியலில் நுழைவதற்காக ரசிகர்களிடம் விருப்பத்தை கேட்கும் வகையில் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கல்போல் இந்த பாடலிலும் விஜய் செம டான்ஸ் ஆடியுள்ளார். அதேநேரம், இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட செட் போட்டு, 2000 டான்சர்களுடன் நடனமாட இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil