நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு ஆராவார வரவேற்பு அளித்துள்ளனர்.
Advertisment
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் படம் வெளியானலே அன்றைய நாள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். மேலும், அவரது படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
Advertisment
Advertisements
நடிகர் விஜய் சமூக வலைதள பக்கங்களில் ட்விட்டர் கணக்கை மட்டும் வைத்திருந்தார். இந்தநிலையில் நடிகர் விஜய் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கி உள்ளார்.
இன்ஸ்டாகிராமின் கணக்கை தொடங்கிய விஜய், தனது முதல் பதிவில், லியோ படத்தின் கெட்டப்பில் புகைப்படத்தை பகிர்ந்து 'ஹலோ நண்பாஸ் மற்றும் நண்பிஸ்' என பதிவிட்டுள்ளார்.
விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியதும் ரசிகர்கள் அவருக்கு பெரிய வரவேற்பை அளித்துள்ளனர். கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களிலே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil