Justin Joseph Rao
திரையில் எதிரி, திரைக்கு வெளியே நண்பன். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம், ஏனெனில் சூப்பர் ஸ்டாரான அவர் "மென்மையாகவும் இனிமையாகவும்" இருந்தார், என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார். படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி நிம்மதியாக உணர ஷாருக்கான் உதவினார்.
ஜவான் படத்தில், விஜய் சேதுபதி ஷாருக்கானுடன் மோதுகிறார், ஷாருக்கான் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பிளாக்பஸ்டர் தமிழ் படங்களுக்கு பெயர் பெற்ற அட்லி இயக்கிய ஜவான் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபார்ஸி (Farzi) மூலம் விஜய் சேதுபதி OTT தளத்தில் அறிமுகமாகிறார். இந்தநிலையில், விஜய் சேதுபதி indianexpress.com இடம், ஜவானில் ஷாருக்குடன் பணிபுரிந்தது "மிகவும் நல்ல அனுபவமாக" இருந்தது என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: வாரிசு ரூ 210 கோடி; துணிவு ரூ 87 கோடி: பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்த விஜய்
"அவர் மிகவும் இனிமையாக இருந்தார். இது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. முதல் நாள் நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன், ஏனென்றால் அவர் ஒரு பெரிய கலைஞர், ஆனால் அவர் எனக்கு மிகவும் வசதியாக இருந்தார். அன்று அவருக்கு காட்சிகள் இல்லை, ஆனால் அவர் என்னை வசதியாக உணர வைக்க படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். அவர் மிகவும் இனிமையானவர்; நான் அவருடன் உரையாட முடியும்... அவர் ஒரு ஜென்டில்மேன்; ஷாருக் சாருடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்,” என்று விஜய் சேதுபதி கூறினார்.
ஜூன் 2 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஜவான், நடிகை நயன்தாரா இந்தியில் அறிமுகமாகும் படமாகும். இதில் நடிகர்கள் சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் மற்றும் ரிதி டோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் தீபிகா படுகோனே சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
ஷாஹித் கபூரைக் கொண்டு, ஃபார்ஸியை ராஜ் & டிகே இயக்கியுள்ளார், அவர் தி ஃபேமிலி மேன் தொடரை இயக்கியவர். இந்த தொடரை சீதா ஆர் மேனன், சுமன் குமார் மற்றும் ஹுசைன் தலால் ஆகியோர் எழுதியுள்ளனர்.
முன்னதாக ஒரு அறிக்கையில், விஜய் சேதுபதி, "திறமையான நடிகர் மற்றும் அற்புதமான மனிதர்" ஷாஹித் கபூர் மற்றும் ராஜ் மற்றும் டிகே ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது "முழுமையான மகிழ்ச்சி" என்று கூறியிருந்தார்.
"இது போன்ற ஒரு புத்திசாலித்தனமான குழுவுடன் பணிபுரிவது மற்றும் ஃபார்ஸியைப் போல மனதைக் கவரும் ஒன்றை உருவாக்குவது நம்பமுடியாததாக இருந்தது. சிறந்த டிஜிட்டல் அறிமுகத்தைப் பற்றி என்னால் கற்பனை செய்ய முடியவில்லை, மேலும் தொடரின் உலகளாவிய வெளியீட்டிற்காக நான் உற்சாகமாக இருக்கிறேன், ”என்று விஜய் சேதுபதி கூறினார். பார்ஸி தொடரில் ராஷி கண்ணா, கே.கே மேனன், ரெஜினா கசாண்ட்ரா, ஜாகிர் ஹுசைன், புவன் அரோரா, அமோல் பலேகர் மற்றும் குப்ரா சைட் ஆகியோர் நடித்துள்ளனர்.
பார்ஸி தொடரில், ஷாஹித் கபூர், கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் சன்னி என்ற குற்றவாளியாக நடிக்கிறார், அதே நேரத்தில் விஜய் சேதுபதி மைக்கேல் என்ற டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியாக நடிக்கிறார். பார்ஸி பிப்ரவரி 10 அன்று ஓ.டி.டி.,யில் வெளியாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil