Tamilrockers vs super deluxe Movie: சூப்பர் டீலக்ஸ் படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையும் மீறி திருட்டுத்தனமாக படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் பிரதான மிரட்டல், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். ஒரு படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதை இணையதளங்களில் வெளியிடுவது இதன் வாடிக்கையாகிவிட்டது. எனவே படத்தை வெளியிட்ட பிறகும் தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் தமிழ் ராக்கர்ஸை நினைத்து பயப்பட வேண்டியிருக்கிறது.
Super Deluxe Full Movie Leaked In TamilRockers To Free Download: தமிழ் ராக்கர்ஸ் மீது என்ன நடவடிக்கை
அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று (மார்ச் 29) வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கும் தமிழ் ராக்கர்ஸால் மிரட்டல் இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கி, விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
Read More: super deluxe in Tamilrockers: ‘சூப்பர்’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்
இந்தப் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து சட்ட விரோத இணைய தளங்களில் சூப்பர் டீலக்ஸ் படத்தை வெளியிட நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு சூப்பர் டீலக்ஸை காப்பாற்றுமா? தமிழ் ராக்கர்ஸ் அடங்குமா? இதற்கிடையே சூப்பர் டீலக்ஸ் படத்தை பைரசி இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கையும் எகிறியே வருகிறது. தமிழ் ராக்கர்ஸுக்கு யார் மணி கட்டுவது?
இந்தச் சூழலில் படம் ரிலீஸான முதல் நாள் இரவிலேயே சூப்பர் டீலக்ஸ் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.