விஜய் - சிம்ரன் ஜோடியை அடித்துக் கொள்ள இப்ப வரைக்கும் ஆளு இல்லை! உண்மை தானே?

அதற்கு பிறகு அது ஒருமுறை கூட நிகழவில்லை என்பது தான் ரசிகர்களின் வருத்தம்.

vijay simran movies :தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கிய திரை ஜோடி யார்? என்றால் ரசிகர்கள் சற்றும் யோசிக்காமல் விஜய் – சிம்ரன் என்பார்கள். ’ஒன்ஸ் மோர் ’துவங்கி ’துள்ளாத மனமும் துள்ளும்’ ’பிரியமானவளே’ உதயா’ என இவர்கள் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

கோலிவுட் வட்டாரத்தில் ஒருசில ஜோடி தமிழ் ரசிகர்களுக்கு ஃபேவரட் ஆக இன்று வரை இருந்து வருகின்றனர். அதில் முதலிடத்தில் இருப்பவர்கள் விஜய் – சிம்ரன் தான். இந்த ஜோடிகள் இணைந்து நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைத்துள்ளன.

”விஜய் சிம்ரனுடன் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு சரியான ஜோடி சிம்ரன் தான்” என்று விஜய் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தது ரசிகர்களை மிகப் பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்திருந்தது. ஆனால் அதற்கு பிறகு அது ஒருமுறை கூட நிகழவில்லை என்பது தான் ரசிகர்களின் வருத்தம்.

ஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் தான்!

தமிழ் சினிமாவில் கமல் – ஸ்ரீதேவி, ரஜினி – ஸ்ரீப்ரியா போல ஒரு இணை விஜய் – சிம்ரன் ஜோடி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்படி ஒரு இண்ட்ரோ வைத்தே கண்டுப்பிடித்து இருப்பீங்க. இன்றைய டாப் வரிசையில் விஜய் – சிம்ரன் ஜோடிகளின் பிளாஷ்பேக்குகளை தான் பார்க்க போறோம் என்று. கீழே குறிப்பிட்டிருக்கும் லிஸ்டில் உங்கள் ஃபேவரெட் மூவி இருக்கானு பார்த்துக்கோங்க.

ஒன்ஸ் மோர்:

1997 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் தான் விஜய் – சிம்ரன் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ரகம். அதுமட்டுமில்லை ஊர்மிளா பாடல் அந்த கால இளசுகள் அடிக்கடி முனு முனுத்த பாடல்களில் ஒன்று.

துள்ளாத மனமும் துள்ளும் :

எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி வெளியானது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம். விஜய் நடித்த முந்தைய படங்களில் ரசிகர்களால் மறக்க முடியாதது இந்த படம். கேரளாவில் இந்த படம் விஜய்க்கு கேரளாவில் ஒரு மார்க்கெட் கிடைக்க உதவியது என்றே கூறலாம்.

பிரியமானவளே:

துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியான கையோடு 2000ம் ஆண்டில் மீண்டும் விஜய், சிம்ரன் ஜோடி இணைந்து நடித்த படம் தான் பிரியமானவளே. செல்வ பாரதி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அக்ரிமென்ட் திருமணம் என்கிற புதுமையான கதைக்களம் தமிழ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

உதயா:

அழகம் பெருமாள் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 2004 ஆம் ஆண்டு வெளியான உதயா படத்தின் மூலம் மீண்டும் விஜய் – சிம்ரன் ஜோடி இணைந்து நடித்தனர். மேலும், உதயா படம் இவர்கள் இருவரும் ஜோடி போட்டு நடித்த கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு, விஜய் – சிம்ரன் இணைந்து ஜோடியாக படம் நடிக்க மாட்டார்களா? என ரசிகர்கள் நீண்ட ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close