முதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - ஆல்யா மானஸா

கொரோனா வைரஸுக்கு மத்தியில் இந்தப்படம், அவர்களது ரசிகர்கள் முகங்களில் புன்னகையைக் கொண்டு வந்துள்ளது.

Sanjeev – Alya Manasa : விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ என்ற சீரியலின் மூலம் ரசிகர்களின் ஃபேவரிட் ஜோடியானவர்கள் ஆல்யா மனசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் சம்மதிக்காததால், தாங்கள் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாக சஞ்சீவ் தெரிவித்திருந்தார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சஞ்சீவ்.

தமிழகத்தில் ரயில்வே மருத்துவர், மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்நிலையில் கடந்த மார்ச் 20-ம் தேதி, ஆல்யா மானஸாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த விஷயம் அவர்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது. குழந்தையை பெறுவதற்கு முன்பு இந்த ஜோடி வேறொருவரையும் தங்கள் குடும்பத்துக்கு வரவேற்றது.  ஆமாம், பிரசவம் ஆவதற்கு சில மணி நேரம் முன்பு தான் மெர்சிடிஸ் காரின் வருகையை ஆல்யாவும், சஞ்சீவும் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

 

View this post on Instagram

 

Kutty Papu ???? I request everyone to be at home safe ????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

இப்போது, சஞ்சீவ் தனது மகளின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கொடூரமான கொரோனா வைரஸுக்கு மத்தியில் இந்தப்படம், அவர்களது ரசிகர்கள் முகங்களில் புன்னகையைக் கொண்டு வந்துள்ளது. “குட்டி பாப்பு – எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!” என்றுக் குறிப்பிட்டுள்ளார் சஞ்சீவ்.

’கிச்சன் கத்தரிக்கோலில் ஹேர்கட்’ : கோலியின் புதிய ஹேர் ஸ்டைலிஷ்ட்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close