’கிச்சன் கத்தரிக்கோலில் ஹேர்கட்’ : கோலியின் புதிய ஹேர் ஸ்டைலிஷ்ட்!

கப்பிள்ஸ் கோலின் கீழ் வரும் இந்த ஆக்டிவிட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

By: Updated: March 28, 2020, 05:13:17 PM

Virat Kohli, Anushka Sharma : கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்க,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் முடக்கத்தை அறிவித்திருக்கிறார். இதனால் பல நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இன்னும் சிலரோ வீடுகளில் இருந்து வேலை செய்கிறார்கள். வீட்டில் இருப்பவர்கள், புத்தகங்களைப் படிப்பது, திரைப்படம் பார்ப்பது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் சவாலுக்கு இந்தியா எப்படி தயாராகிறது?

 

View this post on Instagram

 

Meanwhile, in quarantine.. ????????‍♂????????‍♀

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

இந்த சுய தனிமைப்படுத்தலில் பல பிரபலங்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஷ்ட் கிடைத்துள்ளார். அவரின் கை வண்ணத்தில் அமைந்த கோலியின் புதிய ஹேர்கட், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த சிகையலங்கார நிபுணர் வேறு யாருமல்ல, கோலியின் மனைவி, நடிகை அனுஷ்கா ஷர்மா தான்.

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு

கோலிக்கு ஹேர்கட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்துள்ளார் அனுஷ்கா. “இதைத் தான் தனிமைப்படுத்தல் உங்களுக்கு செய்கிறது” என்று கோலி கூற அனுஷ்கா சிரிக்கிறார். பின்னர் கோஹ்லி ஒரு வேடிக்கையான கருத்தைத் தெரிவிக்கிறார். “சமையலறை கத்தரிக்கோலால் உங்கள் தலைமுடியை வெட்டுவது, போன்ற விஷயங்களை அனுமதிக்கிறீர்கள்” என்று கூற அனுஷ்கா புன்னகைக்கிறார். கப்பிள்ஸ் கோலின் கீழ் வரும் இந்த ஆக்டிவிட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Virat kohli anushka sharma haircut video quarantine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X