Aranmanaikili Serial : அரண்மனை கிளி சீரியலில் கிளி ஜானுவா, மீனாட்சி அம்மாவான்னு இப்போ கேள்வி வருது. காரணம் அரண்மனையில் இருந்த ஜானுவும் இப்போ வெளியில் இருக்கா. அரண்மனையில் ராணி மாதிரி இருந்த மீனாட்சி அம்மாவும் இப்போது காட்டு வேலை செய்துக்கொண்டு அரண்மனை வாசத்தை தொலைச்சுட்டு நிக்கறாங்க.
நடக்க முடியாத அர்ஜுன் நடக்க வேண்டும் என்று ஜானு பல விரதங்கள் இருந்தாள். நம்ப முடியாத பிரார்த்தனைகள் வேண்டுதல் என்று இருந்து வாசுகி பாம்பு வந்து தீண்டினால் அர்ஜுன் நடந்து விடுவான் என்று, அந்த அளவுக்கு கடுமையான விரதங்கள் இருந்தாள் ஜானு. அப்போது ஜானு இக்கட்டில் சிக்கிக் கொள்ள, என் உயிரையும் தருவேன் ஜானுவை விட்டு விடு என்று அர்ஜுன் வேண்டிக் கொண்டான். அவன் நடப்பதற்குள் அவன் உயிரையும் தருவேன் என்று வேண்டிக்கொண்டது, இப்போது முன்னால் வந்து நிற்குது.
Advertisment
Advertisements
உன் புருஷனுக்கு காலக்கெடு முடிஞ்சு போச்சு, அவன் உயிர் வேண்டும் என்று சித்தர் அடிக்கடி ஜானுவிடம் வந்து சொல்ல, அதுக்கும் ஒரு பரிகார விரதம் இருக்க கிளம்புகிறாள் ஜானு. அர்ஜுனும் துணைக்கு கிளம்ப, அங்கு இவர்களுக்கு முதலிரவு நடந்து விடுது. அர்ஜுனை காணவில்லை என்று மீனாட்சி அம்மா அவனைத் தேடி புறப்பட்டுட்டாங்க. அரண்மனை வாசம் தனக்கு வேண்டாம் என்றும் முடிவுக்கு வந்துட்டாங்க. இதுக்கு முன்னால ஜானுவை வீட்டை விட்டு விரட்டியதும் மீனாட்சி அம்மாதான்.
மீனாட்சி அம்மாவைத் தேடி ஜானு புறப்படுகிறாள், கண்ணில் அடி பட்டு விடுகிறது. அவள் மீனாட்சி அம்மாவை தேடித் சென்ற இடத்தில் அவங்களை கண்டும் பிடித்து விடுகிறாள் . ஆனால், அவளுக்கு அதற்குள் கண்ணில் அடிபட்டு தனது மாமியார் மீனாட்சி அம்மா என்று தெரியாமல் அவங்க கூடவே தங்க நேரிடுது. மீனாட்சி அம்மா கூட கோயிலுக்கு போகும் ஜானு.. கோயிலில் போயும் மீனாட்சி அம்மா, அர்ஜுன் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கறா. அதைக்கேட்டு மாமியார் சிலிரித்து போறாங்க. இதுதாங்க அரண்மனை கிளி கதை..
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"