Vijay TV Baakiyalakshmi serial new promo: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கதையின் முக்கிய முடிச்சு அவிழ்ந்த நிலையிலும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் சுவாஸ்யமாக சென்று கொண்டிருக்கும் சீரியலுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Advertisment
கதையில் தன்னுடைய தோழி ராதிகாதான், தன் கணவன் கோபியின் காதலி என தெரிந்ததும் துடித்துப்போகிறாள் பாக்கியா. இதனையடுத்து, இருவரும் டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது ஒளிப்பரப்பாகி வருகின்றன.
இந்தநிலையில், விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ, சீரியலின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ப்ரோமோவில், நீதிமன்றத்திற்கு வெளியே பாக்கியாவை குற்றம்சாட்டி பேசுகிறார் கோபி. இதைப்பார்த்து எழில் திகைத்து நிற்கிறான்.
நான் ஏமாந்துவிட்டதாக பாக்கியா சொல்ல, பொங்கி எழும் கோபி, உண்மையில் ஏமாந்தது நான் தான். வெளி உலகத்தைப் பத்தி ஒண்ணும் தெரியாத ஒரு மரமண்டையோடு இவ்வளவு நாள் குடும்பம் நடத்துன நான் தான் பெரிய ஏமாளி. நமக்கு இடையே 10 சதவீத ஒற்றுமை கூட இல்லாத நிலையில், உன் கூட 10 வருசம் வாழ்ந்து இருக்கேன். நான் ஏமாளியா? நீ ஏமாளியா? உனக்கு என்னை பிடிக்கவில்லை. அதனால் தான் டைவர்ஸ் என்றதும் துள்ளி குதித்து கோர்ட்டுக்கு வந்துட்ட. இத்தனை வருஷமா, இதையெல்லாம் மனசுக்குள் வச்சு மறைச்சிட்டு வாழ்ந்திருக்க என கூறுகிறார். பின்னர், நானே டைவர்ஸ் முடிவை எடுக்கணும் என வெயிட் பண்ணிட்டு இருந்தியா? அப்பதான் யாரும் உன்மேல் சந்தேகப்பட மாட்டாங்க, உனக்கு அனுதாபம் கிடைக்கும்னு நினைச்சியா என குற்றம் சாட்டுகிறார் கோபி.
இதைப்பார்த்து பொறுக்காத எழில், இதெல்லாம் ரொம்ப ஓவர் அப்பா என எகிற, அவனை தடுக்கிறார் பாக்கியா. உடனே என்னோட வலி எனக்கு தான் தெரியும் என எழிலிடம் எரிந்து விழுகிறார் கோபி.
பின்னர், பாக்கியாவைப் பார்த்து இவ்வளவு வருசம் வாழ்ந்த வாழ்க்கையை ஈஸியா தூக்கிப்போட்டு போற, உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும், உன் மனசுக்குள் எவ்வளவு ப்ளான் பண்ணிருப்ப என கேட்கிறார் கோபி.
இவ்வாறு ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில், கோபியின் குற்றச்சாட்டுகளுக்கு பாக்கியா என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil