/tamil-ie/media/media_files/uploads/2022/08/bakiyalakshmi2.jpg)
Vijay TV Baakiyalakshmi serial promo updates: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. கதையின் முக்கிய முடிச்சு அவிழ்ந்த நிலையிலும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் முன்னனி சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர் இந்த சீரியலுக்கு அளித்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கதையில் தன்னுடைய தோழி ராதிகாதான், தன் கணவன் கோபியின் காதலி என தெரிந்ததும் துடித்துப்போகிறாள் பாக்யா. இதனையடுத்து, இருவரும் டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துக் கொண்டு இருக்கிறது. தற்போது இது தொடர்பான காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்: அசரலையே… அடுத்த படத்திற்கு கதை கேட்கும் லெஜன்ட் சரவணன்!
இந்தநிலையில், விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் புதிய ப்ரோமா சீரியல் ஒளிப்பரப்பு எப்போது என எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்யுள்ளது.
அந்தப் ப்ரோமோவில், பாக்யா வீட்டின் அறையில் இருந்து சூட்கேஸ் உடன் ஹாலுக்கு வருகிறார். அப்போது கோபி, இதற்கு மேல் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது, வெளியே போ என சூட்கேஸை பிடுங்கி வீசுகிறார். அப்போது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சூட்கேஸில், கோபியின் டிரஸ்கள் உள்ளன. இதைப்பார்த்து கோபமடையும் கோபி, எவ்வளவு தைரியம் இருந்த ஏன் டிரஸ்ஸ எடுத்து வைப்ப, ஆமா நான் வெளியில் போகணுமா என பாக்யாவை அடிக்க கை ஓங்குகிறார். உடனே அருகில் நிற்கும் கோபியின் அப்பா கோபியை தடுக்கிறார்.
பின்னர், பாக்யா கோபத்துடன் கோபியிடம், என்னை வெளியில் போகச் சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. எல்லா காலத்திலும் ஆம்பளைங்க தப்ப செய்வீங்க, ஆனா எந்த தப்பும் செய்யாத பெண்கள் அழுதுக்கிட்டு ரோட்டுல நிக்கணுமா? நான் எங்கேயும் போகமாட்டேன், இது என் வீடு, நீங்க வெளில போங்க, என ஆவேசமாக சொல்கிறார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சியாகிறார்.
இவ்வாறு ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில், கோபி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.