Vijay TV Baakiyalakshmi serial promo updates: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கதையின் முக்கிய முடிச்சு அவிழ்ந்த நிலையிலும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் முன்னனி சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர் இந்த சீரியலுக்கு அளித்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Advertisment
கதையில் தன்னுடைய தோழி ராதிகாதான், தன் கணவன் கோபியின் காதலி என தெரிய வர, துடித்துப்போகும் பாக்யா, டைவர்ஸ் கேட்கிறார். இதனால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துக் கொண்டு இருக்கிறது. பின்னர் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் பாக்யா. தற்போது இது தொடர்பான காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன.
இந்தநிலையில், விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் புதிய ப்ரோமா சீரியல் ஒளிப்பரப்பு எப்போது என எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்யுள்ளது.
கோபியை வெளிய அனுப்புவதிலேயே பிடிவாதமா இருந்த, இப்ப அவன் நேரா ராதிகா வீட்டுக்கு போயிட்டான் என பாக்யாவை திட்டுகிறார் கோபியின் அம்மா ஈஸ்வரி.
பின்னர் ராதிகா வீட்டுக்கு செல்லும் ஈஸ்வரி, கோபி எங்கே என தேடுகிறார். தொடர்ந்து கோபியை உள்ள வச்சுக்கிட்டு எங்கிட்ட கதை சொல்றியா என ராதிகாவிடம் சண்டையிடுகிறார். அதற்கு ராதிகாவின் அம்மா, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, அசிங்கமா இருக்கு என கத்துகிறார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாத ஈஸ்வரி தொடர்ந்து கோபியைத் தேட, அப்போது பொறுமையிழந்த ராதிகா, நாங்க யாரும் கோபியை ஒழித்து வைக்கல என கூறுகிறார்.
அப்போது, என் குடும்பத்த கெடுத்துட்டு, உங்க பொண்ண வாழ வச்சிடலாம்னு நினைக்காதீங்க. நான் வயிறு எரிஞ்சு சொல்றேன், நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என ஈஸ்வரி சாபமிடுகிறார்.
இதைக்கேட்டு கோபமான ராதிகா, போதும் நிறுத்துங்க, இதுக்கு மேல நீங்க பேசுற எதையும் கேட்க முடியாது, வெளில போங்க என கத்துகிறார். ராதிகா இவ்வாறு சொன்னதும் கோபமாக வெளியேறுகிறார் ஈஸ்வரி.