இயக்குனர் சாரே… கதையில் பெரிய பெரிய மிஸ்டேக் எல்லாம் பண்றீங்க..!

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மாவுக்கு வெண்பா டெஸ்ட் எடுக்கறா. கருத்தடை மாத்திரை தருகிறாள்.

Bharathi Kannamma
Bharathi Kannamma

Bharathi Kannamma Serial : பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கர்ப்பமாகிவிட்டாள் என்று தெரிந்ததும் குடும்பமே குதூகலமா இருக்காங்க. பரவாயில்லையே பாரதி கண்ணம்மா சீரியலில் பிரச்சனை இல்லாம சுமுகமா போகுதேன்னு மக்கள் சந்தோஷத்தில் சீரியலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். வந்துட்டாய்யா வந்துட்டான்னு சொல்ற மாதிரி வெண்பா அமைதியை கெடுக்க வந்துட்டா. பொக்கேவுடன் பாரதியை பார்க்க ஆஸ்பிடலுக்கு வருகிறாள்.

பான் – ஆதார் இணைப்பிற்கு கடைசி வாய்ப்பு : மறவாதீர், அபராதத்தை தவிர்ப்பீர்

ஏற்கனவே கண்ணம்மாவின் பள்ளித் தோழனுடன் சேர்த்து கண்ணம்மாவை சந்தேக்கப்டும் நோக்கில் பாரதியைத் தூண்டி விட்டவள் வெண்பா. பாரதி பதிலுக்கு வெண்பாவை கன்னத்தில் அறைந்து அவளை ஆஸ்பிடலை விட்டே வெளியில் அனுப்பிவிட்டான். இப்போ அல்வா மாதிரி இந்த விஷயம் கிடைத்து இருக்கிறது விடுவாளா வெண்பா. உனக்குத்தான் குழந்தை பிறக்காதுன்னு சர்ட்டிஃபிகேட் குடுத்தேன் மறந்துட்டியா பாரதின்னு கேட்டு வெறுப்பேத்தறா. சந்தேகத் தீயை கொளுத்திப் போடுகிறாள்.

இந்த பாரதி, வெண்பா மோசமானவன் அவள் கொடுத்த சர்ட்டிஃ பிகேட்டை நம்பலாமா? நம்ம ஆஸ்பிடலில் இன்னொரு டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்னு நினைக்காம இருக்கிறதே கதைக்கு பெரிய மைனஸ். இதையும் தாண்டி இப்படியே வெண்பா கொளுத்திப் போடுவதாக வச்சு கதையை நகர்த்தலாம்னு இயக்குநர் நினைச்சா மக்களை அவர் முட்டாளாக்க நினைக்கறார்னு அர்த்தம்.

தனிமைப்படுத்தப்படும் இந்திய தலைநகர்… எல்லைகள் மூடப்படுகிறது!

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மாவுக்கு வெண்பா டெஸ்ட் எடுக்கறா. கருத்தடை மாத்திரை தருகிறாள். அதையும் கண்ணம்மா டாக்டர் புருஷனிடம் காண்பிக்காமல் கூட சாப்பிடுகிறாளாம். ஒரு டாக்டர் தன் பொண்டாட்டி என்ன மாத்திரை சாப்பிடுகிறாள் என்று கூட பார்க்காமல் இருப்பது, இயக்குநர் சாரே.. கதையில் பெரிய பெரிய மிஸ்டேக்ஸ் எல்லாம் செய்யறீங்க. நீங்க 1000 எபிசோட் கொண்டாட்டம் கூட கொண்டாடுங்க. ஆனால், மக்களை முட்டாளாக்கி குளிர் காயாதீங்க. வெண்பா குழந்தை பிறக்காதுன்னு சொன்னதை நம்பி இன்னொரு டெஸ்ட் எடுத்து பார்க்காமல் பாரதி இருப்பது என்பது எவ்வளவு முட்டாள்தனம். அதையும் ஒரு டாக்டர் செய்யறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bharathi kannama pregnancy venba

Next Story
பொறந்தநாள் வாழ்த்துகள் செந்தில் அண்ணே!comedian senthil birthday best comedies of Actor Senthil, best comedies of Actor Senthil along with actor Goundamani
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com