Advertisment

விஜய் டி.வி டு கலைஞர் டி.வி: புதிய சீரியலில் பாரதி கண்ணம்மா நடிகை

கலைஞர் டிவி சீரியலில் களமிறங்கும் பாரதி கண்ணம்மா நடிகை; ப்ரோமோ வீடியோ

author-image
WebDesk
Jun 28, 2023 22:12 IST
New Update
Roopa Sree

ரூபா ஸ்ரீ

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரூபா ஸ்ரீ கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ரஞ்சிதமே தொடரில் நடித்து வருகிறார்.

Advertisment

டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் விஜய் டிவி சீரியல்களுள் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிக்குப் பிறகு உடனடியாக இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது சீசனில் வினுஷா தேவி மற்றும் சிபு சூர்யன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியலில் பாரதியின் அம்மா சௌந்தர்யாவாக நடித்து வருபவர் ரூபா ஸ்ரீ.

இதையும் படியுங்கள்: பரபரப்பின் உச்சம்… எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய நடிகர் விலகல் : அடுத்து வருவது யார்?

இவர் டூயட், புதையல், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் ரூபா ஸ்ரீ நடித்துள்ளார். சின்னத்திரையில் உதிரிபூக்கள், வாணி ராணி, தெய்வம் தந்த வீடு, பாரதி கண்ணம்மா சீசன் 1 உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

publive-image

இந்தநிலையில், ரூபா ஸ்ரீ கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கலைஞர் டிவியில் ரஞ்சிதமே என்ற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காதலர்களான ரஞ்சித் - ரஜினி ஆகிய இருவருக்கும் நடக்கும் ஈகோ சண்டையை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. ரஞ்சித் பாத்திரத்தில் ஷிவ் சதிஷ், ரஜினி பாத்திரத்தில் மணிஷா ஜித் நடிக்கின்றனர். இதில் ரஞ்சித்தின் தாயாராக ரூபா ஸ்ரீ நடிக்கவுள்ளார்.

publive-image

ரஞ்சிதமே சீரியலின் ப்ரோமோ வீடியோவில், பதிவுத் திருமணம் செய்துகொள்ளச் செல்லும் ரஞ்சித்தின், திருமணத்தை நிறுத்தி தாயார் ரூபா ஸ்ரீ கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறார். ஆனால், காதலித்தவனையே கரம்பிடிப்பேன் என்று உறுதியுடன் நிற்கிறார் ரஜினி. இவர்கள் மூவருக்கும் இடையிலான திரைக்கதையே ரஞ்சிதமே சீரியலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijay Tv #Bharathi Kannamma Serial #Kalaignar Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment