Bigg Boss Tamil : பிரபல ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸின் நான்காவது சீசன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
திருமண பந்தத்தில் இணைந்த ’குக் வித் கோமாளி’ நட்சத்திரம்!
பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் என தகவல்கள் உலா வருகின்றன. இந்த நான்காவது சீசனுக்கான போட்டியாளர்கள் குறித்து பல வதந்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி லட்சுமி மேனன், ரம்யா பாண்டியன், புகழ், தீனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் சஞ்சனா சிங் போன்ற பெயர்கள் போட்டியாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Tamil News Today Live : அரசு பணியிடங்களில் இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஆணை!
இதில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயரின் பெயரும் அடிபட்டது. அதோடு இது குறித்து சந்தேகம் கேட்ட ரசிகரிடம், சஸ்பென்ஸாக பதில் கூறியிருந்தார். இந்நிலையில், “நான் உண்மையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்! பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை தோழர்களே !!! நன்றி” என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”