Tamil News Today Live : சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின், இதுதொடர்பாக, இபிஸ் -ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதன் தலைமையில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மே 5 ஆம் தேதி மூடப்பட்ட உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறப்பு.
சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.நாடாளுமன்றத்தின் அனைத்து விவாதங்களும் அர்த்தமற்றவை: கார்த்தி சிதம்பரம் எம்.பி ட்வீட்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாட வீதிகள் முழுவதும் வண்ண கோலங்கள் வரையப்பட்டு உள்ளது. வரும் 22ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியும், சென்னையில் இருந்து திருக்குடையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 16.9 லட்சம் பேர் இந்தியா வருகை” – விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Tamil News Today Live : நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்து வந்த நிலையில் , மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார், இந்நிலையில் அவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து நடிகர் ராமராஜன் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்த மசோதாக்கள் எனவும் நாட்டின் வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு இது முக்கிய தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Web Title:Tamil news today live ajith statement dmk covid 19 cm edappadi pm modi tamilnadu
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, வருகிற 28-ம் தேதி அதிமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அன்றைய கூட்டத்தில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டதாகவும், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் முடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்பட வில்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்! இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மாலையில் தொடங்கிய கூட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் ஏற்பட்டதாகவும், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் முடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்பட வில்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்! இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மாலையில் தொடங்கிய கூட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
தமிழகத்தில் புதிதாக 5,488 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டிருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு 5,30,908 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,685 ஆனது.
சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,499 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, ‘நிரந்தர முதல்வர் வாழ்க’என தொண்டர்கள் சிலர் கோஷம் எழுப்பினர்.
அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, ‘வருங்கால முதல்வர் வாழ்க, புரட்சித் தலைவியின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்’ என்கிற கோஷங்கள் எழுந்தன. இரு தரப்பு ஆதரவாளர்கள் இப்படி மாறி மாறி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? தேர்தல் கூட்டணி, போஸ்டர் சர்ச்சை, சசிகலா விடுதலை விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு
சசிகலா சிறையிலிருந்து வந்ததும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா (அ.இ.அ.தி.மு.க.) தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டியதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை சமர்பித்துள்ளார்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து விதிமீறல் காரணமாக paytm செயலி நீக்கக்கப்பட்டுள்ளது. Paytm பயனாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என Paytm நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் 180 கேள்விகளில் 176 கேள்விகள் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் 10%-க்கு கீழ் குறைந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணைக்கு உடனே அனுமதி வழங்க டெல்லியில் பிரதமரிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான விஷயம் என கூறி உடனே அனுமதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை.
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கோவை, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு .வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு 'நான் ஒரு விவசாயி' என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசோதாவை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் மத்திய அமைச்சரே பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் .
விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக்கொள்ள வழிவகுப்பதே அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் . ஆன்லைன் வர்த்தகம் செய்யும் விவசாயிக்கு பான் எண் கட்டாயம் விவசாயத்தை வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வரும் சதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் 12 புதிய ரயில் திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி . வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்து தலைமை நீதிபதி உத்தரவு. சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேரும் கடிதம் எழுதி இருந்தனர். பொது விவகாரங்கள் குறித்து விமர்சிக்கும் போது கவனம் தேவை நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என நடிகர் சூர்யாவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து முடிக்க சிபிஐ-க்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்..? - உயர்நீதிமன்ற கிளை கேள்வி. விசாரணை எந்த நிலையில் உள்ளது என செப்.28 ஆம் தேதிக்குள் பதில்தர சிபிஐக்கு உத்தரவு
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் . பி.பி.ஓ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க கோரிக்கை.
10,11, 12-ம் வகுப்பு துணை தேர்வு வரும் 21- ந்தேதி தொடக்கம் - அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு. மாணவர்களை தேர்வுக்கு தயாராகும்படி பள்ளிக்கல்விதுறை அறிவுருத்தியுள்ளது.
அரசு பணியிட மாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவுறுத்தல். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் பொது இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக செலவை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடியவர் . தியாகி இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளில் அவரை போற்றி ஓபிஎஸ் புகழாரம்
135 நாட்களுக்கு பிறகு முதற்கட்டமாக உணவு தானியம் மற்றும் மளிகை கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சந்தைக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல், வியாபாரிகளின் உடல் வெப்பநிலை ஆய்வு செய்தல் , வணிக வளாகத்தில் அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்வது உள்ளிட்ட செயல்முறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக வருகிற 28ஆம் தேதி திருமழிசையில் செயல்படும் காய்கறி சந்தை, மீண்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட உள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை
திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்பான குட்கா வழக்கை வேறு நீபதிக்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரை . உரிமைக்குழுவின் 2வது நோட்டீஸை எதிர்க்கும் திமுக மனுவை வேறுநீதிபதிக்கு மாற்ற ரவிச்சந்திரபாபு பரிந்துரை.
நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்போது பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தேர்தலை நடத்திய தனி நீதிபதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தார். இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த நிலையில், நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்துவதா வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்க போகிறார்கள் என்றும் நீதிமன்றம் வினவியது
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் .பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நா.புகழேந்தி நியமனம்