Bigg Boss Tamil 4 Promo: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது பதினாறு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் தினம் தினம் வெளியாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய ப்ரோமோக்களும் வெளியாகியுள்ளன.
கோவை திருநங்கை ஆக்டிவிஸ்ட் சங்கீதா மர்மமான முறையில் இறப்பு
அந்த வீடியோவில், அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்து பேச வேண்டும் என ரியோ அழைத்திருக்கிறார். அந்த நேரத்தில் ஷிவானி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலர் தாமதமாக வருகிறார்கள்.
அதனால் ரியோ கோபமாக பேசுகிறார். அதை பார்த்த ஷிவானி 'சொல்வது என்றால் என்னிடம் நேராக சொல்லுங்க' என ரியோவிடம் தெரிவித்தார். அதற்குப் பிறகு இந்த வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. அதன் பின் ரம்யா பாண்டியனும் ரியோவுடன் வாக்குவாதம் செய்ய துவங்குகிறார்.
”ரெண்டு நிமிஷம் ஒண்ணா பேசிட்டு எழுந்து போகலாம்ன்னு நினைச்சேன், ஏன்னா எப்போதும் குரூப்பிசம் இருக்குன்னு சொல்லிக் கிட்டே இருக்காங்க" என ரியோ சொல்கிறார். அதற்கு, 'உங்கள் மனதில் வேறு எதோ இருக்கிறது ரியோ. குரூப்பிசம் உங்கள் மைண்டில் இருக்கிறது என்பதால் நீங்கள் இதை கொண்டு வந்திருக்கிறீர்கள்’ என்கிறார் ரம்யா பாண்டியன்.
இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் அல்லது பிக் பாஸ் வீடு ஒரு போட்டி களம் என இரண்டு அணியாக பிரிந்து போட்டியாளர்கள் பட்டிமன்றம் நடத்த வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்களின் காரசாரமான விவாதம் நடைபெறுகிறது.
பிக் பாஸ் ஒரு குடும்பம் என வேல்முருகன் பேச, அதற்கு பிறகு வந்த அனிதா வேல்முருகனை பார்த்து 'அன்பு, எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்ன்னு சொன்னீங்க இல்ல.. பிறகு ஏன் எல்லாரும் உங்களை குத்தும் போது அழுதீங்க' என்கிறார்.
எல்லாரும் ஒரு தேவைக்காக தான் வந்திருக்கிறோம் என ரியோ பேச, அதன் பின் பேசிய நிஷா 'புறணி பேசுவது அழகு.. ஒருவரது உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும் போது தான் அது அசிங்கம். அதை தான் வெளியில் இருப்பவர்கள் செருப்பால் அடிப்பாங்க' என உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார்.
மூன்றாவது ப்ரோமோவில், பட்டிமன்றம் டாஸ்க்கில் பேசும், சுரேஷ் சக்ரவர்த்தி, பிக் பாஸ் போட்டி களம் தான்' என்கிறார். அதோடு குரூப்பிஸம் குறித்தும் அவர் மறைமுகமாக பேசி இருக்கிறார். 'குடும்பம் குடும்பமாக இருக்கிறதே தவிர, குடும்பங்களாக இல்லை' என்கிறார். அதன் பின் பேசிய சனம் ஷெட்டி 'நான் பொதுவாகவே அதிகம் ரியாக்ட் செய்வேன்' என்கிறார். தொடர்ந்து பேசிய பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி வாடா போடா என பேசியது பற்றி குறிப்பிடுகிறார். அதன் பின் பேசிய ஜித்தன் ரமேஷ் 'நீயும் வாயா போயா, மூளை குழம்பிவிட்டதா' என்று தானே பேசினாய் என பாலாஜி முருகதாஸை பார்த்து கேட்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”