திருமண பந்தத்தில் இணைந்த ’குக் வித் கோமாளி’ நட்சத்திரம்!

பெரிதாக எந்த வாய்ப்புகளும் வராததால், மனமுடைந்து தான் தற்கொலைக்கு முயன்றதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

பெரிதாக எந்த வாய்ப்புகளும் வராததால், மனமுடைந்து தான் தற்கொலைக்கு முயன்றதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cooku with comali Sai Sakthi gets married

சாய் சக்தி திருமணம்

பிரபல சின்னத்திரை நடிகரும் விஜய் டிவி-யின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தவருமான, சாய் சக்திக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. சீரியல் நடிகரான சாய் சக்தி ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த வாய்ப்புகளும் வராததால், மனமுடைந்து தான் தற்கொலைக்கு முயன்றதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

பி.எம்-கிசான் மட்டுமல்ல, மற்ற திட்டங்களிலும் மோசடி நடந்திருக்கலாம்

Advertisment

பின்னர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு சாய் சக்திக்கு கிடைத்தது. இந்நிலையில் அவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மீஞ்சூரைச் சேர்ந்த ஃபத்துல் பாத்திமா என்பவருடன் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகள் ஃபாத்திமா சாய் சக்தியின் உறவுக்காரப் பெண் என்கிறார்கள்.

இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில், ”நான் விவாகரத்து பெற்று இரண்டு வருடம் ஆகிவிட்டது. எனக்கு தனிமை மிகவும் மன அழுத்தத்தைத் தருகிறது. அதனால் வீட்டில் எனக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்ய எனக்கு செய்துள்ளார்கள்.

Tamil News Today Live : விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம்!

Advertisment
Advertisements

மும்பையில் இருக்கிற என்னுடைய சொந்தகார பெண் ஒருவரோடு எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகள் நடந்த நேரத்தில் கொரோனா வந்து விட்டது. எனவே கொரோனாவுக்குப் பிறகு திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: