Cooku With Comali: விளையாட்டாக ஆரம்பித்த 'குக்கு வித் கோமாளி' ரியாலிட்டி ஷோ, சூப்பர் ஹிட் ஷோ என்றாகிவிட்டது. இதில் கலந்துக் கொண்டவர்களுக்கு செம ஜாலியான ஒரு சமையல் போட்டி, என்றாலும் குக்குகளுக்கு கூடவே டென்சன் அதிகமாகத்தான் இருந்தது. குக்கு வித் கோமாளி என்று டைட்டில் தானே தவிர, குக்குகள் சொல்ல பெரும்பாலும் கோமாளிகள் தான் சமைக்க நேர்ந்தது. மணிமேகலை, சிவாங்கி, பாலா, தங்கதுரை, புகழ் என்று கோமாளிகள் இந்த போட்டியில் பங்கு பெற்றனர். வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரம்யா பாண்டியன், பாலாஜி, நடிகை ரேகா ஆகியோர் குக்குகளாக இருந்தனர். அட்வான்டேஜ் டாஸ்கில் கோமாளிகள் மாவு பிசைந்து முறுக்கு பிழிய வேண்டும். குக்குகள் சொல்ல சொல்ல இதை கோமாளிகள் செய்ய வேண்டும்.
தூண்டில் போட்டு சுறா பிடிக்கும் பிசிசிஐ – அது நடந்தால் ஐபிஎல் கன்ஃபார்ம்
சிவாங்கி எண்ணெய் காய்வதற்குள் முறுக்கை பிழிய போகிறேன் என்று ரேகாவை டென்ஷனாக்கினார். எண்ணெய் காயலை.. எண்ணெய் காயலை..கொஞ்சம் வெயிட் பண்ணு... என்று ரேகா பட படவென்று எண்ணெயில் தான் பொரிந்த மாதிரி கத்தினார். புகழ் மாவை முறுக்கு அச்சிலில் போட்டு அமுக்கிவிட்டு, அச்சிலை திருப்பிப் போட்டு உமா ரியாஸை டென்சன் ஆக்கினார். இப்படி போடக்கூடாது, திருப்பி போட்டு குழாயை அமுக்கணும் என்று உமா சொல்ல, இல்லை.. இப்போதைக்கு பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு மூடி வச்சேன் என்று சமாளித்தார் புகழ். இப்போதைக்கா... அப்பாடா.. உனக்கு ஒன்னும் தெரியாதோன்னு பயந்துட்டேன்னு சொன்னார் உமா.
கரண்டியில் முறுக்கு பிழிந்து, எண்ணெயில் போடலாம்னு பாலாஜி சொல்ல, கரண்டியைத் தவிர கரண்டிக்கு வெளியில் எல்லா இடத்திலும் முறுக்கு பிழியறான்னு பாலாஜி பாலாவைப் பற்றி சொன்னார். எப்படியாவது மாவை காம்ப்ரஸ் பண்ணி, முறுக்கு பிழிஞ்சு இவரை இம்ப்ரஸ் பண்ணலாம்னு பார்த்தா... பிழியறதே கஷ்டமா இருக்குதுன்னு சொன்னார் பாலா. மணிமேகலை பிழிய முடியாமல் கஷ்டப்பட, அமுக்கு வரும் வரும்னு சொல்றாங்க பிரியங்கா ரோபோ ஷங்கர். முடியலை முடியலைன்னு மணிமேகலை சொல்ல, அமுக்கு வருது வருதுன்னு சொன்னாங்க பிரியங்கா.
டிரடிஷனல் பியூட்டி தான்யா: சோம்பல் முறிக்கும் ஓவியா – புகைப்படத் தொகுப்பு
வருதா வருதான்னு மணிமேகலை கேட்டு.. என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலைன்னு சொன்னாங்க. கடைசியில் முறுக்கு முறுக்காக வந்தது. அப்பா இது ரொம்ப கை வலிக்குதுன்னு மணிமேகலை சொல்ல, கரண்டியில் போட்டா டைம் வேஸ்டு.. அப்படியே எண்ணெயில் டபக் டபக்னு பிழிஞ்சு எடுத்துடலாம் என்று உமா சொல்ல, எல்லா கோமாளிகளும் ஸ்ஸ்... அப்பா இப்பவே கண்ணை கட்டுத்தேன்னு சொல்ற நிலைமைக்கு ஆளாயிட்டாங்க. அந்த நேரம் பார்த்துதான் அலார்ட் ஆயிக்கடா ஆறுமுகம்.. அலார்ட் ஆயிக்கன்னு விஜய் டிவியில் வடிவேலு டயலாக் போட்டாங்க! குக்கு வித் கோமாளி சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ. பார்த்து சிரிக்க, சமையல் பார்த்து கத்துக்க நல்ல வாய்ப்பு.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”