COVID-19 வைரஸ் தொற்று கணிசமாக மேம்படும் பட்சத்தில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்று டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் செயல் தலைமை நிர்வாகி ஜாக் ஃபால் கூறுகையில், "இந்தியா, தென்னாப்பிரிக்காவுடனான தனது ஒப்பந்தத்தை மதிக்க விரும்புகிறது. ஒருவேளை தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும், சிறிது காலம் கழித்து நடைபெறலாம்”என்று வியாழக்கிழமை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
தோனி யுக்தியால் முடிந்த பாகிஸ்தான் விதி - சூப்பர் ஓவர் 'சீக்ரெட்ஸ்' பகிரும் உத்தப்பா
"நாங்கள் அவர்களுடன் (பி.சி.சி.ஐ) ஒரு நல்ல கலந்துரையாடலை மேற்கொண்டோம்," என்று சிஎஸ்ஏ நிர்வாகி மேலும் கூறினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பி.சி.சி.ஐ அதிகாரி கூறுகையில், இந்திய அரசாங்கத்திடமிருந்து அனைத்து அனுமதியையும் பெற்றால், அந்த வாய்ப்பு “இருக்கிறது” என்று கூறினார்.
“முதலில், நாம் வீரர்களின் பாதுகாப்பை ஒரு பசுமை மண்டலத்தில் (பாதுகாப்பை உறுதி செய்தல்) கொண்டு வர வேண்டும். அனைத்தும் சரியாக நடைபெற்றால், நாங்கள் தென்னாப்பிரிக்காவில் விளையாடுவோம்," என்று அந்த அதிகாரி பி.டி.ஐ-இடம் தெரிவித்துள்ளார்.
இந்த இருதரப்பு தொடருக்கு பி.சி.சி.ஐ ஒப்புக்கொள்வது, டி -20 உலகக் கோப்பைக்கு பதிலாக அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஐ.பி.எல் தொடரை நடத்தவும் அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோருவதற்கான செயல்முறையை அவர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக ஃபால் கூறினார்.
'எனது பவுன்ஸ் பந்தை சச்சின் சிக்ஸ் அடிக்க விரும்பினேன்' - நல்லவர் சோயப் அக்தர் பேட்டி
“தேவைப்பட்டால், மூடிய அரங்கில் விளையாட ஒப்புதல் வழங்க விளையாட்டு அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் மிகவும் புதுமையாக இருக்கப் போகிறோம், ஏனெனில் இது எங்களுக்கு ஒரு முக்கியமான சுற்றுப்பயணம். நான் முன்பு கூறியது போல, இந்தியாவின் விருப்பத்தால் நாங்கள் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து தெரிவது என்னவெனில், தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் விளையாட இந்தியா வாண்ட்டடாக விருப்பமாக உள்ளது. அதன் பின் உள்ள காரணம் ஐபிஎல் 2020. ஸோ, இந்தியா - தென்.ஆ., தொடர் நடைபெற்றால், ஐபிஎல் 2020 நடைபெறுவதும் உறுதி!.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil