2003ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சோயப் அக்தர் ஓவரில், சச்சின் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். 274 ரன்கள் சேஸிங்கில் சச்சினின் பயமறியா அந்த ஆட்டம் குறித்தும், சச்சின் 98 ரன்களில் அவுட்டானது குறித்தும், தனது ஓவரில் டீப் ஸ்கொயர் பகுதியில் சச்சின் சிக்ஸ் அடித்தது குறித்தும் சோயப் அக்தர் மனம் திறந்து பேசியுள்ளார்.
“நான் மிகவும் சோகமாக இருந்தேன், ஏனெனில் சச்சின் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அது ஒரு சிறப்பான இன்னிங்ஸ்; அவர் சதம் அடித்திருக்க வேண்டும். அவர் சதம் அடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த பவுன்சரைப் பொறுத்தவரை, அவர் முன்பு செய்ததைப் போலவே மீண்டும் சிக்ஸர் அடிப்பார் என்று ஆசைப்பட்டேன்.
டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடினமான சகாப்தத்தில் விளையாடியவர். இப்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், அவர் 1.30 லட்சத்துக்கு மேல் ரன்கள்எடுத்திருப்பார். எனவே சச்சினுக்கும் கோஹ்லிக்கும் இடையில் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதல்ல.
அண்ணன் அடித்தால் அடி; இடித்தால் இடி; மிதித்தால் மிதி – 30 நொடிகளில் பஞ்சரான பாகுபலி (வீடியோ)
எனது முழு வாழ்க்கையிலும் எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கும் போட்டி, 2003 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான செஞ்சுரியனில் நடந்த உலகக் கோப்பை போட்டி. மிகச் சிறந்த பந்து வீச்சு இருந்த போதிலும் 274 என்ற இலக்கை காக்க நாங்கள் தவறிவிட்டோம்.
எங்கள் இன்னிங்ஸ் முடிந்த பிறகு, நாங்கள் 30-40 ரன்கள் குறைவாக அடித்திருக்கலாம் என்று எனது அணியினரிடம் சொன்னேன். இருப்பினும், அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ‘273 போதாது என்றால் என்ன’ என்று என்னிடம் கூச்சலிட்டனர். நம்மால் இந்தியாவைஆல் அவுட் செய்ய முடியும் என்று அவர்கள் கூறினர். இருப்பினும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிறந்தது என்று எனக்குத் தெரியும், அது இரண்டாவது இன்னிங்ஸிலும் அப்படியே இருக்கும்.
நாங்கள் பந்துவீச்சைத் தொடங்கியபோது, என் இடது முழங்கால் உணர்ச்சியற்றுப் போயிருப்பதைக் கவனித்தேன். இதன் காரணமாக, எனது பந்துவீச்சு ரன்-அப் மூலம் என்னால் சரியாக ஓட முடியவில்லை. இதனால் என்னால் சரியாக பந்து வீச முடியவில்லை. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். உண்மையில், சச்சின் என்னை நன்றாக விளையாடினார்.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஹேர் கட் செய்வதிலும் சச்சின் தான் கிங் : வைரலாகும் வீடியோ
எப்படி பந்து வீசுவது மற்றும் ஆட்டத்தில் எப்படி திருப்புமுனை ஏற்படுத்துவது என்று என்பதில் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, கேப்டன் (வக்கார் யூனிஸ்) என்னை பந்துவீச்சில் இருந்து வெளியேற்றினார். பின்னர் அவர் என்னை இன்னிங்ஸில் அழைத்து வந்தார், அங்கு நான் வேகமாகவும் ஷார்ட் பந்துகளை வீசினேன். நான் ஒரு ஷார்ட் பந்து வீச்சில் சச்சினை 98 ரன்களில்வெளியேற்றினேன். நான் ஆரம்பத்தில் இருந்தே இதுபோன்ற பந்துவீச்சைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று கேப்டனிடம் சொன்னேன். இறுதியில் நாங்கள் போட்டியில் தோற்றோம்.
இது எனக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது, ஏனென்றால் 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் நாங்கள் இந்தியாவை தோற்கடித்திருக்கலாம், ஆனால் எங்களால் முடியவில்லை. உலகக் கோப்பைகளில் எங்களை விட சிறப்பாக விளையாடிய இந்தியாவை இந்த கிரெடிட்டில் இருந்து எடுக்கக்கூடாது” என்றார்.
மீசையில மண்ணு ஒட்டல….ம் கெளம்பு கெளம்பு…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil