தனது நாட்டின் யுஎஃப்சி ஸ்ட்ராவெயிட் சாம்பியனான ஜாங் வெயிலியை என்னால் வீழ்த்த முடியும் என்று கூறிய 69 வயதான சீன tai chi மாஸ்டர் மா பாகோ, வார இறுதியில் ஷாண்டாங்கில் நடந்த ஒரு போட்டியில் 30 வினாடிகளுக்குள் ஒரு தொழில்முறை பாக்ஸரால் வீழ்த்தப்பட்டார்.
tai chi என்பது சீனாவில் கற்றுத் தரப்படும் ஒருவகையான தற்காப்பு கலையாகும். அதில் தான் மாஸ்டராக மா பாகோ பணியாற்றி வந்தார்.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஹேர் கட் செய்வதிலும் சச்சின் தான் கிங் : வைரலாகும் வீடியோ
மா-வின் கருத்துக்கள் சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. ஏன் தெரியுமா? அவர், எம்எம்ஏ(mixed martial arts) வீரர் சூ க்ஸியாடோங்கிடம் இதே போன்று சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், மா-வின் உள்ளூர் அறிமுக போட்டியில், அவர் 49 வயதான வாங் கிங்மினிடம் மோதினார். வாங் ஒரு முன்னாள் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளரும், வீரரும் ஆவார்.
ஆனால், இந்த போட்டி சில நொடிகளில் முடிந்துவிட்டது. கிங்மின்னின் பன்ச்களை தாங்க முடியாத மா பாகோ, 30 நொடிகளில் மயங்கி விழுந்தார்.
இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.
‘என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டனர்; தந்தை மறுத்துவிட்டார்’ – விராட் கோலி
முன்னதாக தான் பிரிட்டன் எம்எம்ஏ(mixed martial arts) வீரர் இர்விங் என்பவரை வீழ்த்தியதாக அறிவித்திருந்தார். அது குறித்த வீடியோவும் வெளியாகி இருந்தது. ஆனால், இதற்கு பதிலளித்த இர்விங், தான் ஒரு நடிகராக மட்டுமே அந்த முதியவருடன் மோத தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
குருட்டு தைரியத்தில் போட்டியில் கலந்து கொண்டு எடிட் செய்துவிடலாம் என்று எண்ணிய மா பாகோ, சுயநினைவின்றி மல்லாக்க விழுந்தது தான் இப்போது வைரல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil