‘என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டனர்; தந்தை மறுத்துவிட்டார்’ – விராட் கோலி

தன்னை உள்நாட்டு கிரிக்கெட் அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு தனது தந்தை கண்டிப்புடன் மறுத்து விட்டதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் இந்தியக் கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியுடன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உரையாடினார். ஆராவாரம் இல்லா ஆரம்பம் –…

By: May 19, 2020, 3:29:16 PM

தன்னை உள்நாட்டு கிரிக்கெட் அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு தனது தந்தை கண்டிப்புடன் மறுத்து விட்டதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் இந்தியக் கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியுடன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உரையாடினார்.

ஆராவாரம் இல்லா ஆரம்பம் – இனி விளையாட்டு போட்டிகள் இப்படித்தான் (புகைப்படத் தொகுப்பு)

அப்போது பேசிய கோலி, “நான் இதனை ஏற்கெனவே கூறியிருக்கிறேன், மாநில கிரிக்கெட்டில் ஒரு காலக்கட்டத்தில் நிறைய விஷயங்கள் நடக்கும் பல விஷயங்கள் நியாயம் தர்மத்தை மீறியதாக இருக்கும். விதிமுறைகளை மீறி தகுதி, திறமை மட்டும் போதாது, அதற்கு மேல் சிலது தேவை என்று யாராவது ஒருவர் கூறுவார்.

என் தந்தை தெருவிளக்கில் படித்து வழக்கறிஞர் ஆனார், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். கஷ்டப்பட்டு வந்தவருக்கு லஞ்ச லாவண்ய மொழியெல்லாம் புரியாது. அவருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

என் தந்தை பயிற்சியாளரிடம் என்ன கூறினார் தெரியுமா? ‘விராட் அவன் திறமையினால் தேர்வு செய்யப்பட்டால் நல்லது. இல்லையெனில் அவன் விளையாட வேண்டாம், நான் லஞ்சமெல்லாம் கொடுக்க மாட்டேன்’ என்றார் திட்டவட்டமாக.

இனி அப்ரிடியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை – யுவராஜ், ஹர்பஜன் முடிவு

இதனால், நான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை, நான் நிறைய அழுதேன். நான் உடைந்தே போய்விட்டேன். ஆனால் இது எனக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, உலகம் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னேற வேண்டுமெனில் யாரும் செய்யாத ஒன்றை நாம் செய்ய வேண்டும். அதாவது உன் சொந்த கடின உழைப்பைத்தான் நீ நம்பவேண்டும் என்ற பாடத்தை இது எனக்குக் கற்றுத் தந்தது. இதைத்தான் என் தந்தை வாழ்ந்ததாக நான் பார்த்தேன், கற்றுக் கொண்டேன். எனக்கு சரியானவற்றை, சரியான செயல்களைக் கற்றுக் கொடுத்த சம்பவமாகும் இது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Virat kohli sunil chhetri video call kohli father bribe

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X