அப்ளிகேஷன் போடாதீங்க… சில வருடங்களுக்கு சிங்கிள்தான்!

அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி விதம் விதமான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

By: Updated: April 6, 2020, 03:05:50 PM

Ramya Pandian: விஜய் டிவியின், ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் பெற்று இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலக நடிகையாக அறிமுகம் ஆனார். பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் விஜய் டிவியின், ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சமையல் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்க ரம்யாவுக்கு விஜய் டிவி வாய்ப்பு வழங்கியது.

கொரோனா வைரஸால் உங்கள் மாவட்டம் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது?

இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ரம்யா பாண்டியன். நிகழ்ச்சியின் இடையிடையே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி விதம் விதமான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். நடிகர் விஜய்யின் ரசிகை என்று சொல்லிக் கொள்ளும் ரம்யா பாண்டியன், ’குக்கு வித் கோமாளி’ தனக்கு பெரும் புகழை தேடித் தந்து இருப்பதாக கூறுகிறார்.

’இந்த உணவு முறையை பின்பற்றினால் ஃபிட்னெஸ் நிச்சயம்’ – சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்

இப்போதைக்கு மட்டும் இல்லை கொஞ்ச வருடத்துக்கு நான் சிங்கிள் தான் என்று கூறும் ரம்யா பாண்டியனின், இப்போதைய இலக்கு, நிறைய சினிமாக்களில் நடித்து நிலையான ஒரு இடத்தை தமிழ் சினிமா உலகில் பிடிக்க வேண்டும் என்பது தானாம். காட்டன் சேலைகள் உடுத்துவது ரொம்ப பிடிக்கும் என்றாலும், பட்டு சேலைகள் என்றால் அலாதி பிரியம் உண்டு என்றும் கூறுகிறார். குக்கு வித் கோமாளி முடிந்தபோது ரசிகர்களுக்கும் தனக்குமான கனெக்ஷன் மிஸ் ஆவதாக நினைத்து, ரொம்ப ஃபீல் செய்தேன் என்றும் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ஒரு புகழ் குக்கு வித் கோமாளியால் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv cooku with komali ramya pandian

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X