/tamil-ie/media/media_files/uploads/2021/01/444-3.jpg)
pandian stores kathir mullai pandian stores
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த குமரன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.
அதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியிலேயே மக்கள் அதிகம் விரும்பும் சீரியல்களின் பட்டியலில் இடம்பெற்றது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான முல்லை வேடத்தில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த டிசம்பர் மாதம் பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் மரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிககளை அதிர்ச்சிக்குள்ளாகியது.
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா முல்லையாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதற்கிடையே, இத்தொடரில் 'கதிர்' பாத்திரத்தில் நடித்து குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டதாக சமூக ஊடங்களில் செய்தி வெளியாகத் தொடங்கியது. இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
நிலாவுக்கு விடை கொடுத்த அஞ்சலி: ரசிகர்கள் ஷாக்
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பி விட்டதாக குமரன் தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.